Advertisement


ஐ.எஸ்.எல்., கால்பந்து ஆரம்பம் *சாதிக்குமா சென்னை அணி

நவம்பர் 19, 2020 22:29
 Comments  
 


ISL football, india, chennai, kolkata, kerala
 

கோவா: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் இன்று துவங்குகிறது. கொரோனா பரவலுக்குப் பின் இந்திய மண்ணில் நடக்கும் முதல் போட்டித் தொடர் என்பதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கடற்கரை நகரமான கோவாவில் இன்று துவங்கி, அடுத்த நான்கு மாதங்களுக்கு நடக்கவுள்ளன. சென்னை, மூன்று முறை சாம்பியன் கோல்கட்டா, மும்பை, கேரள உள்ளிட்ட அணிகளுடன், புதியதாக ஈஸ்ட் பெங்கால் அணியும் சேர்ந்து, 11 அணிகள் களமிறங்குகின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

ஒரே இடம்

கொரோனா பரவல் காரணமாக போட்டிகளை நேரில் காண அனுமதியில்லை. அனைத்து போட்டிகளும் கோவாவில் உள்ள பம்போலிம், படோர்டா, வாஸ்கோ என மூன்று மைதானத்தில் மட்டும் நடக்கும்.

அபுதாபி, சிட்டி கால்பந்து கிளப் அணி, மும்பையின் பெரும் பங்குகளை வாங்கியுள்ளது. இதனால் மும்பை அணி மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரு முறை ‘கோல்டன் கிளவ்ஸ்’ வென்ற குர்பிரீத் சிங் சாந்து, ஐ.எஸ்.எல்., தொடரில் அதிக கோல் அடித்த இந்திய வீரர் சுனில் செத்ரி, பெங்களூரு அணிக்கு கைகொடுக்க காத்திருக்கின்றனர்.

கறுப்புக் குதிரை

இரு முறை சாம்பியன் ஆன சென்னை அணி, இம்முறை கறுப்பு குதிரையாக வலம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் இருந்த 7 அன்னிய வீரர்களில் எல் சபியா, கிரிவெல்லாரோ மட்டும் நீடிக்கின்றனர். போஸ்னியாவின் எனெஸ் சிபோவிச் 30, தஜிகிஸ்தான், ‘சீனியர்’ வீரர் பட்குலோ பட்குல்லோயவ் 30, சுலோவாகிய அணியின் முன்கள வீரர் ஜாகுப் சில்வெஸ்டர் 31, தற்காப்பு பகுதியை பலப்படுத்தும் வகையில், பின்கள வீரர்கள் ரீகன் சிங் 29, பனாய் 31, என பலர் புதியதாக இணைந்துள்ளனர்.

கடந்த தொடரின் ‘கோல்டன் பூட்’ வென்ற வால்ஸ்கிஸ், பயிற்சியாளர் ஓவன் கோயல், தற்போது ஜாம்ஷெட்பூர் அணிக்கு சென்று விட்டனர். இந்திய வீரர்கள் அனிருத் தபா, சாங்டே, தோய் சிங்குடன் புதிய பயிற்சியாளர் சிசபா லாஸ்லோ 56, இணைந்து கடந்த முறை பைனலில் கோட்டை விட்ட கோப்பையை மீண்டும் கொண்டு வருவர் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

தவிர ஒடிசா, வடகிழக்கு யுனைடெட் அணிகளும் போட்டியில் உள்ளன. இன்று நடக்கும் முதல் மோதலில் கேரளா, கோல்கட்டா மோகன் பகான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

82 நாடுகளில் ஒளிபரப்பு

ஐ.எஸ்.எஸ்., தொடரைக் காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை. ‘டிவி’ ஒளிபரப்பில் தான் வருமானம் வரும். இதனால் இத்தொடர் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் கண்டு ரசிக்கும் வகையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா, மத்திய, தென் கிழக்கு ஆசியா என மொத்தம் 82 நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

 

சென்னை மோதல் எப்போது

முதல்கட்ட அட்டவணைப் படி சென்னை அணி 10 போட்டிகளில் பங்கேற்கிறது.

இதன் விபரம்:

தேதி எதிரணி இடம்

நவ. 24 ஜாம்ஷெட்பூர் வாஸ்கோ

நவ. 29 கேரளா பம்போலிம்

டிச. 4 பெங்களூரு பம்போலிம்

டிச. 9 மும்பை பம்போலிம்

டிச. 13 வடகிழக்கு வாஸ்கோ*

டிச. 19 கோவா படோர்டா

டிச. 26 ஈஸ்ட் பெங்கால் வாஸ்கோ

டிச. 29 மோகன்பகான் பம்போலிம்

ஜன. 4 ஐதராபாத் பம்போலிம்

2021

ஜன. 10 ஒடிசா பம்போலிம்*

* போட்டிகள் இரவு 7:30 மணிக்கு (டிச. 13, ஜன. 10ல் மாலை 5:00 மணி) துவங்கும்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?