Advertisement


சிக்கலில் ஆஸி., ஓபன்

நவம்பர் 18, 2020 21:35
 Comments  
 


Tennis, Australian Open could be delayed
 

மெல்போர்ன்: கொரோனா காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தாமதமாகத் துவங்கும் எனத் தெரிகிறது.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், 2021 ஜன.,ல் மெல்போர்னில் துவங்க உள்ளது. வழக்கமாக இத்தொடரில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் வரும் டிச., முதல் ஆஸ்திரேலியா வரத் துவங்குவர்.

ஆனால் கொரோனா காரணமாக டென்னிஸ் நட்சத்திரங்கள் வருவது உறுதியில்லாமல் உள்ளது. தவிர, இவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஒருவேளை வழக்கமான வருகையில் தாமதம் ஏற்பட்டால் 2021, ஜன. 18ல் இத்தொடர் துவங்குவது சந்தேகம் தான்.

தவிர, பயிற்சி போட்டிகள் நடத்த அனுமதிக்கப்பட்டால், முக்கிய தொடரை திட்டமிட்டபடி துவங்க முடியாது, ஓரிரு வாரங்கள் வரை தள்ளிப்போகலாம். எனினும் ஆண்டின் முதல் கிராண்ட்லாம் தொடரை திட்டமிட்டபடி நடத்த, பயிற்சிப் போட்டிகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?