Advertisement


நடிகையாகிறார் சானியா மிர்சா

நவம்பர் 18, 2020 21:28
 Comments  
 


Sania Mirza to feature in web series to create awareness about tuberculosis
 

புதுடில்லி: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, இணையதள தொடரில் நடிக்க உள்ளார்.

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 34. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் பெண்கள் இரட்டையர் (3), கலப்பு இரட்டையர் (3) பிரிவுகளில் 6 கோப்பை வென்றுள்ளார். தற்போது இணையதள தொடரில் நடிக்க முடிவு செய்துள்ளார். ‘எம்.டி.வி., நிஷேத் அலோன் டுகெதர்’ என்ற நிகழ்ச்சியில் காசநோய் (‘டிபி’) குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நடிக்க உள்ளார்.

அவர் கூறியது:

இந்தியாவில் பெரும்பாலும் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் காசநோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் ‘ரிஸ்க்’ ஆனது. தற்போது தொற்றாக அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்துவது கடினமாகி உள்ளது. இது தான், விழிப்புணர்வு படத்தில் நடிக்க துாண்டுகோலாக இருந்தது. காசநோய்க்கு எதிரான போரில் எனது பங்கு சிறிது உதவும் என நம்புகிறேன்.

இவ்வாறு சானியா மிர்சா கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?