Advertisement


நடால் அதிர்ச்சி தோல்வி

நவம்பர் 18, 2020 17:50
 Comments  
 


ATP Finals, Tennis, London, Nadal, Loss, Thiem
 

லண்டன்: ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் லீக் போட்டியில் ஸ்பெயினின் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

லண்டனில், ஆண்களுக்கான ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் உலகின் ‛டாப்-8’ வீரர்கள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றனர். ‛பி’ பிரிவு லீக் போட்டியில் உலகின் ‛நம்பர்-2’ ஸ்பெயினின் ரபெல் நடால், 3வது இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் மோதினர். ‛டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை 6-7 என இழந்த நடால், ‛டை பிரேக்கர்’ வரை நீடித்த 2வது செட்டை 6-7 எனக் கோட்டைவிட்டார். முடிவில் நடால் 6-7, 6-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் கிரீசின் ஸ்டெபானஸ் டிசிட்சிபாஸ, ஆஸ்திரேலியாவின் ஆன்ட்ரி ரப்லெவ் மோதினர். இதில் டிசிட்சிபாஸ் 6-1, 4-6, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?