Advertisement


அனுமதி பெறாத ஐ.எஸ்.எல்., அணிகள்

நவம்பர் 16, 2020 22:39
 Comments  
 


 Five ISL clubs fail to secure license from AIFF
 

கோவா: ஐ.எஸ்.எல்., தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஐந்து அணிகள் அனுமதி வாங்காமல் உள்ளன.

கொரோனா பரவலுக்குப் பின் இந்திய மண்ணில் முதன் முறையாக உள்ளூர் போட்டித் தொடர் நடக்கவுள்ளது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 7 வது சீசன் 20ம் தேதி கோவாவில் துவங்க உள்ளது. 11 அணிகள் மோதவுள்ளன.

சென்னை, கோவா, மும்பை, பெங்களூரு, கோல்கட்டா, ஜாம்ஷெட்பூர் என ஆறு அணிகள் 2020–21 சீசனில் பங்கேற்கத் தேவையான ஆசிய கிளப் கால்பந்து (ஏ.எப்.சி.,) மற்றும் அகில இந்திய கால்பந்து சங்கத்திடம் (ஏ.ஐ.எப்.எப்.,) அனுமதி பெற்றன.

ஆனால் ஒடிசா, வடகிழக்கு யுனைடெட், கேரளா, ஐதராபாத் மற்றும் புதியதாக பங்கேற்கவுள்ள ஈஸ்ட் பெங்கால் அணிகள், ஐ.எஸ்.எல்., தொடரில் பங்கேற்கத் தேவையான அனுமதி பெறவில்லை என தெரியவந்துள்ளது.

ஒருவேளை இத்தொடரில் சாதிக்கும் பட்சத்தில், அனுமதி பெறாததால் ஏ.எப்.சி., சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க முடியாது. ஏ.ஐ.எப்.எப்., தலைமை அதிகாரி சுனந்தோ தர் கூறுகையில்,‘‘ஐ.எஸ்.எல்., தொடரில் பங்கேற்க விரும்பினால் அனுமதி பெறாத ஐந்து அணிகள், ‘லைசன்சிங்’ கமிட்டியிடம் விலக்கு பெற வேண்டும்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?