Advertisement


கருங்கோழி பண்ணை...தோனி கலக்கல்

நவம்பர் 13, 2020 18:29
 Comments  
 


Black chicken Farm, Kadaknath chicken Farm, Mahendra Singh Dhoni, Ranchi, India, Cricket
 

ராஞ்சி: மருத்துவ குணம் வாய்ந்த கருங்கோழி பண்ணை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் தோனி.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. ஓய்வுக்கு பின் ராஞ்சியில் உள்ள 43 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம், பால், கோழி, வாத்து பண்ணைகள் அமைத்து பயனுள்ள முறையில் நேரத்தை செலவிடுகிறார். அடுத்து, கருங்கோழி பண்ணை அமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக மத்திய பிரதேசத்தின் ஜபாவ் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி வினோத் மெஹ்தாவிடம் இருந்து 2,000 கருங்கோழி குஞ்சுகளை வாங்க உள்ளார்.

வினோத் கூறுகையில்,‘‘தோனியின் பண்ணையை சேர்ந்த நிர்வாகிகள் என்னை தொடர்பு கொண்டு ‘ஆர்டர்’ கொடுத்தனர். முன்பணமும் செலுத்தி விட்டனர். டிச.15க்குள் ராஞ்சிக்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரின் பண்ணைக்கு 2,000 கருங்கோழி குஞ்சுகளை வழங்குவதில் பெருமை அடைகிறேன்,’’என்றார்.

மருத்துவ குணம் கொண்ட கருங்கோழி அரிய வகையை சேர்ந்தது. குறைவான கொழுப்பு, அதிக புரதச்சத்து கொண்டது. மற்ற கோழிகளுடன் ஒப்பிடுகையில் கூடுதல் ருசியாக இருக்கும். ரத்தம், இறைச்சி என எல்லாமே கருப்பாக இருக்கும். மத்தியப்பிரதேசத்தில் உள்ள மலை வாழ் மக்கள் இவ்வகை கோழிகளை அதிகம் வளர்க்கின்றனர். ஒரு கிலோ கருங்கோழி கறி 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கருங்கோழி முட்டை 20–40 ரூபாயாக உள்ளது. இந்தியா முழுவதும் கருங்கோழியின் தேவை அதிகமாக  உள்ளது. இதனை உணர்ந்து தான் சாமர்த்தியமாக கருங்கோழி பண்ணை அமைக்கிறார் தோனி.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?