Advertisement


அவ்வளவு எளிதல்ல ஐ.எஸ்.எல்., * என்ன சொல்கிறார் சுனில் செத்ரி

நவம்பர் 12, 2020 22:19
 Comments  
 


Sunil Chhetri gearing up for ISL in earnest, says staying in bubble is not easy
 

புதுடில்லி: ‘ஐ.எஸ்.எல்., தொடருக்காக பாதுகாப்பு வளையத்தில் இருப்பது அவ்வளவு எளிதல்ல,’’ என சுனில் செத்ரி தெரிவித்தார்.

ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 7வது சீசன் 20ம் தேதி துவங்கவுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 11 அணிகள் பங்கேற்க உள்ளன. இதனால் 20 போட்டிகள் கூடுதலாக, மொத்தம் 115 போட்டிகள் நடக்கவுள்ளன.

கொரோனா காரணமாக போட்டிகள் அனைத்தும் கோவாவில் உள்ள படோர்டா, திலக், பம்போலிம் என மூன்று மைதானங்களில் நடக்க உள்ளன. போட்டியை காண ரசிர்களுக்கு அனுமதி தரப்படவில்லை.

முதல் மோதலில் கோல்கட்டா–மோகன் பகான் அணி, கேரளாவை சந்திக்கிறது. சென்னை அணி தனது முதல் போட்டியில் 24ம் தேதி, ஜாம்ஷெட்பூரை சந்திக்க உள்ளது. இத்தொடர் குறித்து பெங்களூரு அணி கேப்டன் சுனில் செத்ரி 36 கூறியது:

ஐ.எஸ்.எல்., தொடருக்காக நாங்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். கொரோனா உயர்மட்ட பாதுகாப்பு வளையத்தில் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளோம். குறிப்பிட்ட ஒருஇடத்துக்குள்  தங்கி இருப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை ஒத்துக் கொள்கிறேன். வேறு வழியில்லை என்பதால் இப்படித்தான் இருக்க வேண்டும்.

அதேநேரம் இங்கு அதிக நேரம் கிடைப்பதால் கூடுதல் பயிற்சியில் ஈடுபடுகிறோம். தொடர் துவங்குவதற்கு முன் எங்களால் முடிந்தவரை சிறப்பான முறையில் உடற்தகுதி பெற முயற்சித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?