Advertisement


மும்பை அணியை சமாளிக்குமா பஞ்சாப்

அக்டோபர் 17, 2020 22:02
 Comments  
 


IPL 2020, T20 Cricket, Mumbai, Punjab, Rohit Sharma
 

துபாய்: ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இன்று, துபாயில் நடக்கும் லீக் போட்டியில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சமீபத்தில் அபுதாபியில் இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் மும்பை அணி 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

ரோகித் நம்பிக்கை: மும்பை அணி 8 போட்டியில், 6 வெற்றி, 2 தோல்வி என, 12 புள்ளிகளுடன் உள்ளது. இன்று வெற்றி பெறும் பட்சத்தில் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்யலாம். கடைசியாக கோல்கட்டாவை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ள மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (251 ரன்கள்), குயின்டன் டி காக் (269), சூர்யகுமார் யாதவ் (243) ‘டாப்–ஆர்டரில்’ நம்பிக்கை அளிக்கின்றனர். ‘மிடில்–ஆர்டரில்’ இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, போலார்டு கைகொடுத்தால் நல்ல ஸ்கோரை பெறலாம்.

வேகப்பந்துவீச்சில் பும்ரா, பவுல்ட் கூட்டணி அசத்துகிறது. ‘சுழலில்’ ராகுல் சகார், குர்னால் பாண்ட்யா ஆறுதல் தருகின்றனர்.

 

கெய்ல் பலம்: பஞ்சாப் அணி 8 போட்டியில், 2 வெற்றி, 6 தோல்வி என, 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இன்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. கடைசியாக பெங்களூருவை வீழ்த்திய மகிழ்ச்சியில் உள்ள பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெய்ல் வரவு புத்துயிர் அளித்துள்ளது. கேப்டன் லோகேஷ் ராகுல் (448 ரன்), மயங்க் அகர்வால் (382) ரன் மழை பொழியலாம்.

வேகத்தில் முகமது ஷமி (12 விக்.,) நம்பிக்கை தருகிறார். ‘சுழலில்’ ரவி பிஷ்னாய் (8 விக்.,), முருகன் அஷ்வின் (6) சாதிக்கலாம்.

 

அபுதாபியில் இன்று நடக்கும் மற்றொரு லீக் போட்டியில் கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

 

25 முறை மோதல்

ஐ.பி.எல்., அரங்கில் மும்பை, பஞ்சாப் அணிகள் 25 முறை மோதியுள்ளன. இதில் மும்பை 14, பஞ்சாப் 11ல் வென்றன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?