Advertisement


மும்பை அனுபவம்...லாரா பெருமிதம்

அக்டோபர் 17, 2020 21:59
 Comments  
 


IPL 2020, T20 Cricket, Mumbai, Rohit Sharma, Lara
 

அபுதாபி: ஐ.பி.எல்., தொடரில் வழக்கம் போல மும்பை அணி ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, குயின்டன் அசத்த, கோல்கட்டாவை சுலபமாக வென்றது.

இது குறித்து மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,‘‘கொரோனா காரணமாக 6 மாத காலம் கிரிக்கெட் விளையாடாத வீரர்கள், இப்போது திறமை வெளிப்படுத்தி வருகின்றனர். ஐ.பி.எல்., போட்டிகளின் முடிவு எப்போதும் வேண்டுமானாலும் திசை மாறும். நல்ல நிலையில் இருந்த அணிகள் திடீரென தோல்வியை சந்தித்ததை பார்த்திருக்கிறோம். எனவே ஒருபோதும் மனநிறைவு கொள்ளக்கூடாது. வீரர்கள் அனைவரும் வெற்றிப்பசியுடன் உள்ளனர். களத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வெற்றிநடையை தொடர விரும்புகிறோம்,’’என்றார்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் லாரா கூறுகையில்,‘‘ஐ.பி.எல்., தொடரில் இப்போதைக்கு மும்பை தான் ‘நம்பர்–1’அணியாக திகழ்கிறது. டில்லி அணியும் சவால் கொடுக்கிறது. இருப்பினும் நான்கு முறை கோப்பை வென்றது, அனுபவ வீரர்கள் இடம்பெற்றிருப்பது மும்பைக்கு சாதகம்,’’என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?