Advertisement


கோல்கட்டா கேப்டன் மாற்றம்: காம்பிர் காட்டம்

அக்டோபர் 17, 2020 21:57
 Comments  
 


IPL 2020, T20 Cricket, Kolkata, Captain, Dinesh Karthik, Gambhir
 

அபுதாபி: ‘‘கோல்கட்டா அணியின் கேப்டனை பாதியில் மாற்றியது தவறான முடிவு,’’ என, கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல்., தொடருக்கான கோல்கட்டா அணியில் கேப்டனாக தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இருந்தார். இந்த சீசனில் இவரது தலைமையிலான கோல்கட்டா அணி 7 போட்டியில் 4 வெற்றி, 3 தோல்வியை பெற்றிருந்தது. இந்நிலையில் ‘பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக’, தினேஷ் கார்த்திக் திடீரென அறிவித்தார். இவருக்கு பதிலாக கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) வென்று தந்த இயான் மார்கன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இதற்கு, முன்னாள் கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காம்பிர் கூறியது: இயான் மார்கனால் கோல்கட்டா அணியில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வர முடியும் எனத் தோன்றவில்லை. தொடரின் துவக்கத்திலேயே இவரை கேப்டனாக நியமித்திருந்தால் மாற்றங்கள் செய்திருக்க முடியும். ஏனெனில் கேப்டனுக்கு, பயிற்சியாளருக்கு நல்ல புரிதல் இருக்க வேண்டும்.

கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகியது ஆச்சர்யம் அளித்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக இவர், கேப்டனாக உள்ளார். தொடரின் நடுவில் யாரும் கேப்டனை மாற்ற மாட்டார்கள். கேப்டனை மாற்றும் அளவுக்கு கோல்கட்டா அணி மோசமாக செயல்படவில்லை. உலக கோப்பை பெற்றுத் தந்த கேப்டன் உங்கள் அணியில் இருப்பதை பற்றி பேசுவதால் கார்த்திக்கிற்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டிருக்கும். துவக்கத்திலேயே இம்முடிவை எடுத்திருந்தால் கார்த்திக் நெருக்கடி இல்லாமல் விளையாடி இருப்பார்.

பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக விலகினேன் என்று கார்த்திக் கூறலாம். ஆனால் அணி நிர்வாகம் அவர் மீது திருப்தியாக உள்ளதா, இல்லையா என்பது அவருக்கு நன்றாக தெரிந்திருக்கும். இது துரதிருஷ்டவசமானது.

இவ்வாறு காம்பிர் கூறினார்.

 

மார்கன் விளக்கம்

மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து கோல்கட்டா அணி கேப்டன் இயான் மார்கன் கூறுகையில், ‘‘மும்பைக்கு எதிராக ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் சோபிக்காதது பின்னடைவாக அமைந்தது. பேட்டிங்கில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்த போட்டியில் வெற்றி பெற முயற்சிப்போம்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?