Advertisement


பாக்., வீரர் ஓய்வு

அக்டோபர் 17, 2020 21:54
 Comments  
 


Umar Gul, Pakistan, Cricket, Retirement
 

கராச்சி: பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் உமர் குல் 36. கடந்த 2002ல் நியூசிலாந்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையில் விளையாடிய இவர், 2003ல் பாகிஸ்தான் சீனியர் அணியில் அறிமுகமானார். கடந்த 2007ல் நடந்த முதலாவது ‘டுவென்டி–20’ உலக கோப்பையில் அதிக விக்கெட் (13) கைப்பற்றிய பவுலரான இவர், 2009ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை வென்ற பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்தார்.

கடைசியாக 2016ல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற குல், 47 டெஸ்ட் (163 விக்கெட்), 130 ஒருநாள் (179), 60 சர்வதேச ‘டுவென்டி–20’ (85) போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது ராவல்பிண்டியில் நடக்கும் தேசிய ‘டுவென்டி–20’ கோப்பையில் பலுாசிஸ்தான் அணிக்காக பங்கேற்றார். இந்த அணி, சதர்ன் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் குல், அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதுகுறித்து குல் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘மிகவும் கனமான இதயத்துடனும், நிறைய சிந்தனைகளுடனும், தேசிய ‘டுவென்டி–20’ கோப்பைக்கு பின், அனைத்து விதமான போட்டிகளில் இருந்து விடை பெற முடிவு செய்துள்ளேன். பாகிஸ்தானுக்காக விளையாடியதை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?