Advertisement


சென்னை அணியை வீழ்த்தியது டில்லி: தவான் கலக்கல் சதம்

அக்டோபர் 17, 2020 19:07
 Comments  
 


IPL 2020, T20 Cricket, Chennai, Delhi, Dhawan, Century
 

சார்ஜா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய அக்சர் படேல், சென்னை அணிக்கு வில்லனாக மாறினார். இவர், 3 சிக்சர் விளாச டில்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய தவான் சதம் கடந்தார்.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதின. சென்னை அணியில் பியுஸ் சாவ்லா நீக்கப்பட்டு கேதர் ஜாதவ் சேர்க்கப்பட்டார்.  டில்லி அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

டுபிளசி அபாரம்: சென்னை அணிக்கு சாம் கர்ரான், டுபிளசி ஜோடி துவக்கம் தந்தது. துஷார் தேஸ்பாண்டே வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் சாம் கர்ரான் ‘டக்–அவுட்’ ஆனார். இரண்டாவது ஓவரை ரபாடா ‘மெய்டனாக’ வீசினார். அடுத்து வந்த வாட்சன், தேஷ்பாண்டே வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார்.

நார்ட்ஜே வீசிய 5வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசிய டுபிளசி, தேஷ்பாண்டே வீசிய 11வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். பொறுப்பாக ஆடிய டுபிளசி, 39 பந்தில் அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்த போது நார்ட்ஜே பந்தில் வாட்சன் (36) போல்டானார்.

 

தோனி ஏமாற்றம்: ரபாடா ‘வேகத்தில்’ டுபிளசி (58) வெளியேறினார். கேப்டன் தோனி (3), நார்ட்ஜே பந்தில் அவுட்டானார். பொறுப்பாக ஆடிய அம்பதி ராயுடு, அஷ்வின், ஸ்டாய்னிஸ், நார்ட்ஜே, ரபாடா பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார். தேஷ்பாண்டே, ரபாடா பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த ரவிந்திர ஜடேஜா, நார்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் விளாசினார்.

 

சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. ராயுடு (45), ஜடேஜா (33) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி சார்பில் நார்ட்ஜே 2 விக்கெட் கைப்பற்றினார்.

 

தவான் விளாசல்: சவாலான இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு பிரித்வி ஷா (0), ரகானே (8) ஏமாற்றினர். பின் இணைந்த ஷிகர் தவான், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி பொறுப்பாக ரன் சேர்த்தது. ஜடேஜா, கரண் சர்மா பந்தில் தொடர்ச்சியாக தலா 2 பவுண்டரி அடித்தார் தவான். டுவைன் பிராவோ பந்தில் ஸ்ரேயாஸ் (23) அவுட்டானார்.

அடுத்து வந்த ஸ்டாய்னிஸ், கரண் சர்மா வீசிய 13வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். இவர், 24 ரன்னில் அவுட்டானார். அலெக்ஸ் கேரி (4) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய தவான், ஐ.பி.எல்., அரங்கில் முதல் சதமடித்தார்.

கடைசி ஓவரில் டில்லியின் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டது. ஜடேஜா வீசிய 20வது ஓவரில் 3 சிக்சர் விளாசிய அக்சர் படேல் வெற்றியை உறுதி செய்தார்.

 

டில்லி அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் (101), அக்சர் படேல் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

ரோட்டில் விழுந்த பந்து

டில்லியின் துஷார் தேஷ்பாண்டே வீசிய 18வது ஓவரின் 5வது பந்தை ரவிந்திர ஜடேஜா (சென்னை) துாக்கி அடித்தார். மைதானத்தை விட்டு வெளியே சென்ற பந்து சாலையில் விழுந்தது.

 

முதல் சதம்

அபாரமாக ஆடிய டில்லி அணியின் ஷிகர் தவான், 101 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இவர், ஐ.பி.எல்., அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

தவிர இது, இந்த சீசனில் பதிவான 3வது சதம். ஏற்கனவே பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல் (132* ரன், எதிர்: பெங்களூரு), மயங்க் அகர்வால் (106 ரன், எதிர்: ராஜஸ்தான்) சதமடித்திருந்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?