Advertisement


ஐ.எஸ்.எல்.,: 7 வீரர்களுக்கு கொரோனா

அக்டோபர் 12, 2020 22:18
 Comments  
 


Teams start arriving in Goa for ISL, CORONA
 

மர்கோவா: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் பங்கேற்க உள்ள 7 வீரர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் அடுத்த மாதம் (நவ., முதல் 2021 மார்ச்) துவங்க உள்ளது. இந்த சீசனில் புதியதாக இணைந்த ஈஸ்ட் பெங்கால் உட்பட மொத்தம் 11 அணிகள் பங்கேற்க உள்ளன. போட்டிகள் கோவாவின் மர்கோவா, பம்போலிம், வாஸ்கோ என மூன்று மைதானங்களில் மட்டும் நடக்கவுள்ளன. போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை.

கோவா, பெங்களூரு, ஐதராபாத், கேரளா உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே தங்கள் வீரர்களுக்கான பயிற்சிகளை துவக்கி விட்டன. கொரோனா விதிகளை பின்பற்றி நடக்கவுள்ள இத்தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் கோவா வரத்துவங்கினர். ஜாம்ஷெட்பூர் அணிக்காக பங்கேற்கும் வால்ஸ்கிஸ், பீட்டர் ஹார்ட்லே ஏற்கனவே இந்தியா வந்துவிட்டனர்.

இவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. இதில் 7 வீரர்கள், ஒரு துணை பயிற்சியாளருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. எந்த அணியை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. வீரர்கள் கொரோனா பாதுகாப்பு விதிகளின் படி, ஓட்டல்களில் தனிமையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?