Advertisement


இகா ஸ்வியாடெக் முன்னேற்றம்: டென்னிஸ் தரவரிசையில்

அக்டோபர் 12, 2020 21:13
 Comments  
 


ATP, WTA Tennis Ranking, Iga Swiatek
 

புதுடில்லி: டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் தரவரிசையில் பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்ற போலந்தின் இகா ஸ்வியாடெக் 17வது இடத்துக்கு முன்னேறினார்.

டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யு.டி.ஏ., வெளியிட்டது. இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், 37 இடங்கள் முன்னேறி 17வது இடம் பிடித்தார். இவர், சமீபத்தில் முடிந்த பிரெஞ்ச் ஓபன் பைனலில் அமெரிக்காவின் சோபியா கெனினை வீழ்த்தி, முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். இத்தொடரில் பைனல் வரை சென்ற சோபியா கெனின், 6வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறினார். முதல் மூன்று இடங்களில் முறையே ஆஷ்லே பார்டி (ஆஸ்திரேலியா), சிமோனா ஹாலெப் (ருமேனியா), நவோமி ஒசாகா (ஜப்பான்) நீடிக்கின்றனர்.செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிலிஸ்கோவா, 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு செக்குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா, 8வது இடத்துக்கு முன்னேறினார். அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், 10வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஆண்களுக்கான ஏ.டி.பி., தரவரிசையில் முதல் நான்கு இடங்களை முறையே ஜோகோவிச் (செர்பியா), நடால் (ஸ்பெயின்), தியம் (ஆஸ்திரியா), பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் தக்கவைத்துக் கொண்டனர். கிரீஸ் வீரர் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் 5வது இடத்துக்கு முன்னேறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?