Advertisement


நடால் சாம்பியன்: பிரெஞ்ச் ஓபனில் ஆதிக்கம்

அக்டோபர் 11, 2020 22:13
 Comments  
 


French Open Tennis, Nadal, Champion, 13rh Time, Djokovic
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் நடால் 13வது முறையாக கோப்பை வென்றார். பைனலில், செர்பியாவின் ஜோகோவிச்சை தோற்கடித்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்–1’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 2வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபெல் நடால் மோதினர்.

முதல் செட்டை 6–0 எனக் கைப்பற்றிய நடால், 2வது செட்டை 6–2 என தன்வசப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய இவர், 3வது செட்டை 7–5 என வென்றார். முடிவில் நடால் 6–0, 6–2, 7–5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, பிரெஞ்ச் ஓபனில் 13வது முறையாக கோப்பை வென்றார். தவிர இது, இவரது 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் அதிக முறை கோப்பை வென்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளனர்.

நடால், ஆஸ்திரேலிய ஓபனில் 1 (2009), பிரெஞ்ச் ஓபனில் 13 (2005–08, 10–14, 17–20), விம்பிள்டனில் 2 (2008, 2010), யு.எஸ்., ஓபனில் 4 (2010, 13, 17, 19) முறை கோப்பை வென்றுள்ளார். தவிர நடால், பிரெஞ்ச் ஓபனில் 100வது வெற்றியை பதிவு செய்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?