Advertisement


கோப்பை வெல்வாரா நடால் *ஜோகோவிச்சுடன் மோதல்

அக்டோபர் 10, 2020 22:57
 Comments  
 


french open tennis, nadal, djokovic
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனலில் இன்று நடால், ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

பிரான்சின் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகத் தரவரிசையில் முதல் இரு இடத்தில் உள்ள செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயினின் நடால் மோதுகின்றனர். நடாலை பொறுத்தவரையில் கடந்த 2005 முதல் இத்தொடரில் பங்கேற்கிறார். இதுவரை 15 ஆண்டில் 12 முறை பைனலுக்கு முன்னேறி, அத்தனை முறையும் கோப்பை வென்று, ஆதிக்கம் செலுத்துகிறார். 

தற்போது 13வது முறையாக சாதிக்க காத்திருக்கிறார். இன்று அசத்தும் பட்சத்தில் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் அதிக கோப்பை வென்ற ஜோகோவிச் (20 முறை) சாதனையை சமன் செய்யலாம். 

‘நம்பர்–1’ வீரர் ஜோகோவிச், இதுவரை பிரெஞ்ச் ஓபனில் ஒரு முறை தான் (2016) கோப்பை வென்றுள்ளார். மூன்று முறை பைனலில் தோற்றுள்ளார். 2012 பைனலில் நடாலிடம் வீழ்ந்தார். மற்றபடி ஒட்டுமொத்தமாக மோதிய 55 போட்டிகளில் ஜோகோவிச் 29, நடால் 26ல் வென்றனர். பிரெஞ்ச் ஓபனில் இருவரும் மோதிய 7 போட்டிகளில் நடால் 6ல் வென்றதால், மீண்டும் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

100

பிரெஞ்ச் ஓபனில் இதுவரை நடால் 99 வெற்றிகள் பெற்றுள்ளார். இன்று வெல்லும் பட்சத்தில் இத்தொடரில் 100 வது வெற்றியை பதிவு செய்யலாம். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?