Advertisement


பைனலில் நடால்-ஜோகோவிச்: பிரெஞ்ச் ஓபனில் மோதல்

அக்டோபர் 10, 2020 10:15
 Comments  
 


French Open Tennis, Final, Nadal, Djokovic
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு நடால், ஜோகோவிச் முன்னேறினர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது.  ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ ஸ்பெயினின் ரபெல் நடால், அர்ஜென்டினாவின் டீகோ ஸ்வார்ட்ஸ்மேன் மோதினர். அபாரமாக ஆடிய நடால் 6–3, 6–3, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் உலகின் ‛நம்பர்-1’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 5-7, 4-6, 6-1 என்ற கணக்கில் கிரீஸ் வீரர் ஸ்டெபானஸ் சிட்சிபாசை  போராடி வீழ்த்தினார். பைனலில் நடால், ஜோகோவிச் மோதுகின்றனர்.

சாதிப்பாரா கெனின்: இன்று நடக்கும் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்–6’ அமெரிக்காவின் சோபியா கெனின், 54வது இடத்தில் உள்ள போலந்தின் இகா ஸ்வியாடெக் மோதுகின்றனர். டபிள்யு.டி.ஏ., சீனியர் அரங்கில் இவர்கள் இருவரும் முதன்முறையாக மோதுகின்றன. கடந்த 2016ல் நடந்த பிரெஞ்ச் ஓபன் ஜூனியர் பிரிவு 3வது சுற்றில் இகா 6–4, 7–5 என, கெனினை வீழ்த்தி இருந்தார்.

காலிறுதியில் சகவீராங்கனை டேனியல் கோலின்சை வீழ்த்திய கெனின், அரையிறுதியில் செக்குடியரசின் கிவிட்டோவாவை தோற்கடித்தார். இவர் இன்றைய பைனலில் அசத்தும் பட்சத்தில் பிரெஞ்ச் ஓபனில் முதல் பட்டத்தையும், ஒட்டுமொத்தமாக தனது 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றலாம். ஏற்கனவே இவர், இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வென்றிருந்தார்.

நான்காவது சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை வென்ற இகா, இன்றைய பைனலில் சாதித்தால் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?