Advertisement


ரத்தாகிறதா ரெய்னா ஒப்பந்தம்: சென்னை அணி புதுமுடிவு

அக்டோபர் 02, 2020 22:33
 Comments  
 


Raina, Harbhajan Singh, Chennai Super Kings, Contract Cancelled, T20 Cricket, IPL
 

சென்னை: ரெய்னா, ஹர்பஜன் சிங் ஒப்பந்தங்களை சென்னை ஐ.பி.எல்., அணி நிர்வாகம் ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது.

சென்னை அணி வீரர்கள் ரெய்னா, ஹர்பஜன். கடந்த 2018ல் மூன்றாண்டுக்கு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. ரெய்னாவுக்கு ரூ. 11 கோடி, ஹர்பஜனுக்கு ரூ. 2 கோடி தரப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இந்த சீசனுடன் முடிகிறது.

 

இதனிடையே 13வது சீசன் ஐ.பி.எல்., தொடருக்காக எமிரேட்ஸ் சென்ற ரெய்னா, தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பினார். ஹர்பஜன் சிங்கும் தொடரில் இருந்து விலகினார். சமீபத்தில் இருவரது பெயர்களையும் சென்னை அணி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கியது.

 

ஒப்பந்தம் ரத்து: இந்த சீசனில் இருவரும் பங்கேற்காததை அடுத்து, சம்பளமும் தரப்படாது. தற்போது இரு வீரர்களின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இதுகுறித்து சென்னை அணி நிர்வாகம் எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டது.

சென்னை அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில்,‘‘சென்னை அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு மட்டும் தான் சம்பளம் தரப்படும். விளையாடவில்லை என்றால் சம்பளம் கிடைக்காது,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?