Advertisement


செரினா, கிவிட்டோவா அபாரம்

செப்டம்பர் 28, 2020 23:00
 Comments  
 


French Open 2020 Rafael Nadal, Serena Williams, Paris
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், செக்குடியரசின் கிவிட்டோவா வெற்றி பெற்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முதல் சுற்று போட்டிகள் நடந்தன. அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், சக வீராங்கனை கிறிஸ்டி ஆனை சந்தித்தார். முதல் செட் ‘டைபிரேக்கர்’ வரை நீடித்தது. இதில் செரினா 7–6 என வென்றார்.

அடுத்த செட்டை 6–0 என எளிதாக கைப்பற்றினார் செரினா. முடிவில் செரினா 7–6, 6–0 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றார்.

கிவிட்டோவா வெற்றி

செக் குடியரசின் கிவிட்டோவா, பிரான்சின் டோடினை 6–3, 7–5 என்ற கணக்கில் வீழ்த்தினார். செக் குடியரசின் சினியகோவா, அமெரிக்காவின் லாரா டேவிசை 7–6, 6–2 என வென்றார்.

அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ரஷ்யாவின் ஷிமைத்லோவாவிடம் (6–4, 6–4) வீழ்ந்தார். மற்ற போட்டிகளில் ஸ்விட்டோலினா (உக்ரைன்), பவுச்சர்டு(கனடா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), பாவோலினி, சாரா இரானி (இத்தாலி), பெர்டென்ஸ் (நெதர்லாந்து), பிரன்கோவா (பல்கேரியா) உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

தியம் அபாரம்

சமீபத்திய யு.எஸ்., ஓபன் சாம்பியன் ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், குரோஷியாவின் மரின் சிலிச்சை சந்தித்தார். முதல் செட்டை 6–4 என தியம் கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர் அடுத்த இரு செட்டுகளையும் 6–3, 6–3 என வசப்படுத்தினார். முடிவில் தியம் 6–4, 6–3, 6–3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

ஜப்பான் வீரர் நிஷிகோரி, கனடாவின் ஆகரை 7–5, 6–3, 7–3 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். மற்ற போட்டிகளில் ஸ்பெயினின் மார்டினஸ், அமெரிக்காவில் பால் வெற்றி பெற்றனர்.

 

10 டிகிரி குளிரில்...

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பொதுவாக கோடைக்காலத்தில் நடக்கும். கொரோனா காரணமாக வழக்கத்தை விட நான்கு மாதங்கள் தாமதமாக தற்போது நடக்கிறது. இங்கு குளிர் வாட்டி வதைக்கிறது. எலும்பையும் உறைய வைக்கும் அளவுக்கு 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. வீரர், வீராங்கனைகள் முழு அளவில் உடலை மறைக்கும் வகையில் ஆடைகள் அணிந்து விளையாடுகின்றனர். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?