Advertisement


சூப்பர் ஓவரில் பெங்களூரு வெற்றி! * மும்பை ஆட்டம் வீண்

செப்டம்பர் 28, 2020 19:08
 Comments  
 


ipl cricket, mumbai, bangalore, dubai
 
துபாய்: ஐ.பி.எல்., பரபரப்பான லீக் போட்டியில் பெங்களூரு அணி, சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. மும்பை அணியின் போராட்டம் வீணானது. 

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் ரோகித் சர்மாவின் மும்பை அணி, கோஹ்லியின் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார். 

டிவிலியர்ஸ் மிரட்டல்

பெங்களூரு அணிக்கு பின்ச், தேவ்தத் படிக்கல் ஜோடி துவக்கம் கொடுத்தது. பின்ச் (52), படிக்கல் (54) அரைசதம் அடித்தனர். கோஹ்லி 11 பந்தில் 3 ரன் மட்டும் எடுத்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது. துபே (27), டிவிலியர்ஸ் (55) அவுட்டாகாமல் இருந்தனர்.

இஷான் ஆறுதல்

கடின இலக்கைத் துரத்திய மும்பை அணியை ரோகித் (8), சூர்யகுமார் (0) கைவிட்டனர். குயின்டன் டி காக் (14), ஹர்திக் பாண்ட்யா (15) ஏமாற்றினர். இஷான் கிஷான் அரைசதம் எட்டினார். கடைசி 30 பந்தில் மும்பை வெற்றிக்கு 90 ரன் தேவைப்பட்டன. போலார்டு, 20 பந்தில் அரைசதம் கடந்தார். 

போலார்டு ‘திரில்’ 

உதனா வீசிய கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்டன. முதல் இரு பந்தில் 2 ரன் எடுக்கப்பட்டன. 3, 4வது பந்தில் 2 சிக்சர் அடித்த இஷான் கிஷான் (99) 5வது பந்தில் அவுட்டானார். கடைசி பந்தில் போலார்டு பவுண்டரி அடிக்க, போட்டி ‘டை’ ஆனது. 

மும்பை அணியும் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன் எடுத்தது. போலார்டு (60) அவுட்டாகாமல் இருந்தார். 

சூப்பர் ஓவர்

வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. பெங்களூரு தரப்பில் நவ்தீப் சைனி அபாரமாக பந்துவீச, முதல் 4 பந்தில் ஒரு பவுண்டரி உட்பட 6 ரன் எடுக்கப்பட்டன. 5வது பந்தில் போலார்டு (5) அவுட்டானார். அடுத்த பந்தும் வீணாக(ஒரு உதிரி), மும்பை அணி 7 ரன் மட்டும் எடுத்தது. பாண்ட்யா (1) அவுட்டாகாமல் இருந்தார்.

8 ரன் எடுத்தால் வெற்றி என பெங்களூரு களமிறங்க, பும்ரா பந்து வீசினார். முதல் 3 பந்தில் 2 ரன் கிடைத்தது. 4வது பந்தில் பவுண்டரி அடித்த டிவிலியர்ஸ் (6), அடுத்த பந்தில் 1 ரன் எடுத்தார். கடைசி பந்தில் கோஹ்லி (5) பவுண்டரி அடிக்க, பெங்களூரு(11 ரன்) வெற்றி பெற்றது. 

 

150 

 நேற்று ‘டுவென்டி–20’ அரங்கில் இந்தியா, பெங்களூரு அணிகளுக்காக 150வது போட்டிக்கு கேப்டனாக களமிறங்கினார் கோஹ்லி. இதில் 73ல் வெற்றி பெற்றுத் தந்தார். 67 போட்டிகளில் தோல்வி கிடைத்தது. 4 போட்டி ‘டை’ ஆனது. 6 போட்டிகளுக்கு முடிவில்லை. 

ஒட்டுமொத்த ‘டுவென்டி–20’ அரங்கில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர்களில் தோனி (273), டேரன் சமி (208), காம்பிருக்கு (170) அடுத்து கோஹ்லி, 4 வது  வீரராக உள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?