Advertisement


மனதளவில் வலிமை: மன்பிரீத் உற்சாகம்

செப்டம்பர் 15, 2020 21:19
 Comments  
 


Manpreet Singh, Hockey, India, Corono Isolation
 

பெங்களூரு: இந்திய ஹாக்கி அணியினருக்கான பயிற்சி முகாம் பெங்களூருவில் நடக்கிறது. இதில் பங்கேற்க வந்த கேப்டன் மன்பிரீத் சிங், மன்தீப் சிங் உள்ளிட்ட 6 பேருக்கு ‘கொரோனா’ தொற்று உறுதியானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் அனைவரும் மீண்டனர். இருப்பினும் பாதுகாப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள இவர்கள், தனித்தனியாக பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து கேப்டன் மன்பிரீத் சிங் கூறியது: கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நல்ல உணவு வழங்கப்படுகிறதா, ரத்தத்தில் ‘ஆக்சிஜன்’ அளவு சரியாக கண்காணிக்கப்படுகிறதா என, ஹாக்கி இந்தியா அதிகாரிகள் தினமும் எங்களை சோதிப்பர். பயிற்சியாளர் குழுவினர் மற்றும் சகவீரர்கள் ‘வீடியோ கால்’ வழியாக தொடர்பில் இருந்தனர். இது, நாங்கள் உற்சாகமாக இருக்க உதவியது. சகவீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று வருகின்றனர். ஆனால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்.  இக்காலகட்டம் எளிதானதல்ல. இருப்பினும் இந்த அனுபவம், எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்க மனதளவில் வலிமை அளித்துள்ளது.

கொரோனா உறுதியானபோது மனதளவில் நெருக்கடி இருந்தது. ஆனால் மருத்துவமனையில் வழங்கப்பட்ட வசதிகள், இந்திய விளையாட்டு ஆணையத்தின் (‘சாய்’) கண்காணிப்பு போன்றவை விரைவில் மீள உதவியது.

இவ்வாறு மன்பிரீத் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?