Advertisement


ஒசாகா ‘நம்பர்–3’: தரவரிசையில் முன்னேற்றம்

செப்டம்பர் 14, 2020 20:03
 Comments  
 


Tennis Ranking, Naomi Osaka, Japan, Number Three
 

புதுடில்லி: டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யு.டி.ஏ., வெளியிட்டது. ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா, 9வது இடத்தில் இருந்து ‘நம்பர்–3’ இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் முடிந்த யு.எஸ்., ஓபனில் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இத்தொடரில் பைனல் வரை சென்ற பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரன்கா, 13 இடங்கள் முன்னேறி 14வது இடம் பிடித்தார். அரையிறுதி வரை சென்ற அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி, 16 இடங்கள் முன்னேறி 25வது இடம் பிடித்தார்.

முதலிரண்டு இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, ருமேனியாவின் சிமோனா ஹாலெப் நீடிக்கின்றனர்.மற்ற வீராங்கனைகளான கரோலினா பிலிஸ்கோவா (செக்குடியரசு, 4வது இடம்), சோபியா கெனின் (அமெரிக்கா, 5வது), எலினா ஸ்விடோலினா (உக்ரைன், 6வது), பியான்கா (கனடா, 7வது), பெர்டென்ஸ் (நெதர்லாந்து, 8வது), செரினா வில்லியம்ஸ் (அமெரிக்கா, 9வது) ஆகியோர் தலா ஒரு இடம் பின்தங்கினர்.

ஆண்களுக்கான ஏ.டி.பி., தரவரிசையில் இந்தியாவின் சுமித் நாகல், பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் முறையே 127, 141வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.

முதல் 5 இடங்களில் முறையே ஜோகோவிச் (செர்பியா), நடால் (ஸ்பெயின்), தியம் (ஆஸ்திரியா), பெடரர் (சுவிட்சர்லாந்து), மெட்வெடேவ் (ரஷ்யா) நீடிக்கின்றனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?