Advertisement


ரொனால்டோவின் ரூ. 5.8 கோடி மோதிரம்

செப்டம்பர் 13, 2020 21:29
 Comments  
 


Cristiano Ronaldo Bought Engagement Ring For Georgina Rodrigues
 

புதுடில்லி: போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 35. உலக கால்பந்து அரங்கில் அதிக சம்பளம் பெறுபவர். இவரது காதலி ஸ்பெயினின் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ். கடந்த 2016 முதல் இருவரும் ஒன்றாக வசிக்கின்றனர். இந்த ஜோடிக்கு ஆலானா 2, என்ற மகள் உள்ளார். தவிர ரொனால்டோ ஜூனியர் 10, இவா 3, மட்டேவோ 3, என மூன்று குழந்தைகள் உள்ளனர்.  

கடந்த 2018 ல் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். கடந்த மாதம் விடுமுறைக்காக பிரான்ஸ் சென்றனர். அப்போது ரொனால்டோ, ஜார்ஜினாவுக்கு நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவித்துள்ளார். இந்த வைர மோதிரத்தின் மதிப்பு ரூ. 5.8 கோடி. இதை ஜார்ஜினா தனது ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளத்தில் வெளியிட்டார். 

இதையடுத்து, தங்கள் வருங்கால மனைவிக்கு அதிக விலை கொண்ட மோதிரம் அணிவித்த கால்பந்து வீரர்களில், ரொனால்டோ முதலிடம் பெற்றார். இதற்கு முன் இங்கிலாந்தின் ஜோர்டன் பிக்போர்டு, தனது மனைவிக்கு ரூ. 4.7 கோடி மதிப்புள்ள மோதிரம் அணிவித்து இருந்ததே அதிகம். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?