Advertisement


ஒசாகா சாம்பியன்: யு.எஸ்., ஓபனில் அசத்தல்

செப்டம்பர் 13, 2020 09:18
 Comments  
 


US Open Tennis, Naomi Osaka, Japan, Women Single Champion
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‛நம்பர்-9’ ஜப்பானின் நவோமி ஒசாகா, 27வது இடத்தில் உள்ள பெலாரசின் விக்டோரியா அசரன்கா மோதினர். முதல் செட்டை அசரன்கா 6-1 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட ஒசாகா, 2வது செட்டை 6-3 என தன்வசப்படுத்தி பதிலடி தந்தார். வெற்றியாளரை  நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய இவர் 6-3 என வென்றார்.

முடிவில் ஒசாகா 1-6, 6-3, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபனில் 2வது முறையாக (2018, 2020) கோப்பையை கைப்பற்றினார். தவிர இது, இவரது 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தவிர, கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் 3 முறை கோப்பை வென்ற முதல் ஆசிய நட்சத்திரமானார். இதற்கு முன் சீன வீராங்கனை லி நா 2 முறை (2011ல் பிரெஞ்ச், 2014ல் ஆஸி., ஓபன்) பட்டம் வென்றிருந்தார்.

‘மாஸ்க்’ புரட்சி

சமீபத்தில் அமெரிக்காவில் போலீஸ் தாக்குதலில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டார். இனவெறிக்கு எதிராக ஜப்பானின் ஒசாகா, 7 வித்தியாசமான ‘மாஸ்க்’ அணிந்து யு.எஸ்., ஓபனில் பங்கேற்றார். இதில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட கறுப்பினத்தவர்களின் பெயர் இடம் பெற்றிருந்தது.

 

ரூ. 22 கோடி பரிசு

பைனலில் வெற்றி பெற்ற ஜப்பானின் ஒசாகாவுக்கு கோப்பையுடன், ரூ. 22 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த அசரன்காவுக்கு ரூ. 11 கோடி அளிக்கப்பட்டது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?