Advertisement


பைனலில் டொமினிக் தியம்: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்

செப்டம்பர் 12, 2020 15:27
 Comments  
 


US Open Tennis, Mens Single Final, Dominic Thiem, Alexander Zverev
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பைனலுக்கு டொமினிக் தியம், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் முன்னேறினர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ் மோதினர். அபாரமாக ஆடிய தியம் 6–2, 7–6, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபனில் முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்தார். தவிர இவர், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 4வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றார். இதற்கு முன், ஆஸி., ஓபன் (2020), பிரெஞ்ச் ஓபனில் (2018, 2019) பைனல் வரை சென்றிருந்தார்.

 

ஸ்வெரேவ் அபாரம்: மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர்ஸ் ஸ்வெரேவ், ஸ்பெயினின் பாப்லோ பஸ்டா மோதினர். இதில் முதலிரண்டு செட்களை 3–6, 2–6 என இழந்த ஸ்வெரேவ், பின் எழுச்சி கண்டு அடுத்த மூன்று செட்களை 6–3, 6–4, 6–3 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். முடிவில் ஸ்வெரேவ் 3–6, 2–6, 6–3, 6–4, 6–3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறினார்.

 

இதுவரை...

பைனலில் உலகின் ‘நம்பர்–3’ தியம், ‘நம்பர்–7’ ஸ்வெரேவ் மோதுகின்றனர். ஏ.டி.பி., அரங்கில் இவர்கள் இருவரும் 9 முறை மோதினர். இதில் தியம் 7, ஸ்வெரேவ் 2ல் வெற்றி பெற்றனர். கடைசியாக இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் மோதினர். இதில் தியம் வெற்றி பெற்றார்.

 

ஜெர்மனி–ரஷ்ய ஜோடி சாம்பியன்

பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் ஜெர்மனியின் லாரா சீஜெமண்ட், ரஷ்யாவின் வேரா ஸ்வோனரேவா ஜோடி 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் நிக்கோல் மெலிச்சர், சீனாவின் இபான் ஜு ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?