Advertisement


உலக கோப்பைக்கு தகுதி: சந்தேஷ் ஜிங்கன் விருப்பம்

ஆகஸ்ட் 29, 2020 18:55
 Comments  
 


Sandesh Jhingan, Football, India, Arjuna Award, World Cup Aim
 

புதுடில்லி: ‛‛உலக கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தகுதி பெற விரும்புகிறேன்,’’ என, சந்தேஷ் ஜிங்கன் தெரிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து வீரர் சந்தேஷ் ஜிங்கன் 27. கடந்த 2015ல் இந்திய அணியில் அறிமுகமான இவர், இதுவரை 36 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர், இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) தொடரில் கேரளா அணிக்காக இதுவரை 76 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவருக்கு இந்த ஆண்டுக்கான ‛அர்ஜுனா’ விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் இவ்விருது பெறும் 27வது கால்பந்து நட்சத்திரம் என்ற பெருமை பெற்றார். இவரது பார்வை ‛பிபா’ உலக கோப்பை மீது திரும்பி உள்ளது.

இதுகுறித்து சந்தேஷ் ஜிங்கன் கூறுகையில், ‛‛இந்திய அணியை உலக கோப்பைக்கு தகுதி பெற வைப்பதே இலக்கு. ஆனால் இதனை படிப்படியாக தான் அடைய முடியும். முதலில் ‛பிபா’ உலக தரவரிசையில் ‛டாப்-100’ பட்டியலில் இடம் பிடித்து, தொடர்ச்சியாக ஆசிய கோப்பை தொடரில் விளையாட வேண்டும். அதன்பின் உள்ளூர் மற்றும் அன்னிய மண்ணில் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று, ‛டாப்-50’ வரிசையில் இடம் பெற வேண்டும். ஒவ்வொரு வீரரும் உடல் மற்றும் மன ரீதியாக இதற்கு தயாராக வேண்டும். அர்ஜுனா விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இதனால் என் மீதான பொறுப்பு அதிகரித்துள்ளது,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?