Advertisement


சென்னை அணி வீரருக்கு ‘கொரோனா’

ஆகஸ்ட் 28, 2020 18:23
 Comments  
 


IPL T20 Cricket, Chennai Super Kings, Corono Virus Positive, Training Postponed, Deepak Chahar
 

துபாய்: சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் உட்பட 13 பேருக்கு ‘கொரோனா’ வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனால் சென்னை அணியினரின் பயிற்சி முகாம் வரும் செப். 1க்கு ஒத்திவைக்ககப்பட்டது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) வரும் செப். 19 முதல் நவ. 10 வரை நடக்கிறது. இதற்காக தோனி தலைமையிலான சென்னை அணியினர், கடந்த ஆக. 21ல் துபாய் சென்றனர். ஓட்டலில் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட இவர்கள், முதற்கட்ட பயிற்சியை துவக்குவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால் சென்னை அணியினரின் பயிற்சி முகாம் வரும் செப். 1க்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான காரணம் தற்போது தெரிய வந்தது. ஐ.பி.எல்., வழிகாட்டுதலின் படி, தனிமைப்படுத்தப்பட்ட 1, 3, 5வது நாளில் அனைவருக்கும் ‘கொரோனா’ பரிசோதனை நடத்தப்படும். இதில் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்தால் மட்டுமே பயிற்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். ஆனால் சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் உட்பட மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கூடுதலாக 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அந்த வேகப்பந்துவீச்சாளரின் பெயர் அறிவிக்கப்படவில்லை.

 

இதுகுறித்து ஐ.பி.எல்., சீனியர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஆம், சமீபத்தில் இந்தியாவுக்காக விளையாடிய சென்னை அணியின் வலது கை வேகப்பந்துவீச்சாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதேபோல அந்த அணியின் சீனியர் நிர்வாகி, அவரது மனைவி, சமூகவலைதள குழு உறுப்பினர்கள் இருவர் மற்றும் சிலருக்கு, இந்நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது,’’ என்றார்.

இதனால் ஐ.பி.எல்., தொடர் திட்டமிட்டபடி துவங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

யார் அவர்

‘இந்திய அணிக்காக சமீபத்தில் விளையாடிய வலது கை வேகப்பந்துவீச்சாளர் ஒருவருக்கு கொரொனா தொற்று’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் சென்னை அணியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களாக ஷர்துல் தாகூர், தீபக் சகார் மட்டுமே உள்ளனர். இவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இதில், சென்னையில் நடந்த பயிற்சி முகாமில் சகார் பங்கேற்றார். இவருடன் தோனி, ரெய்னாவும் பயிற்சியில் ஈடுபட்டனர். இதனால் சென்னை அணி கலக்கத்தில் உள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?