Advertisement


இங்கிலாந்து இரண்டாவது வெற்றி * தொடரை வென்று அசத்தல்

ஆகஸ்ட் 01, 2020 21:53
 Comments  
 


Ireland, england, cricket, Southampton
 

சவுத்தாம்ப்டன்: அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2–0 என கைப்பற்றியது.

இங்கிலாந்து சென்ற அயர்லாந்து அணி உலக கோப்பை சூப்பர் லீக் தொடரின் ஒரு பகுதியாக, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற அயர்லாந்து, பேட்டிங் தேர்வு செய்தது.

வில்லே அபாரம்

அயர்லாந்து அணிக்கு ஸ்டெர்லிங் (12), டிலானி (0) மோசமான துவக்கம் தந்தனர். இருவரையும் வில்லே வெளியேற்றினார். கேப்டன் பால்பிர்ன் 15 ரன் மட்டும் எடுத்தார். சற்று தாக்குப்பிடித்த டெக்டர் 28 ரன்களுக்கு, ரஷித் சுழலில் சிக்கினார். தொடர்ந்து அசத்திய ரஷித், கெவின் ஓ பிரையனையும் (3) அவுட்டாக்கினார். டக்கர் (21), சிமி சிங் (25) சற்று கைகொடுத்தனர். 

ஹாம்பெர் (68) ரன் எடுக்க, அயர்லாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்தின் அடில் ரஷித் 3, வில்லே 2 விக்கெட் வீழ்த்தினர்.

பேர்ஸ்டோவ் கலக்கல்

எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (0), வின்ஸ் (16), பான்டன் (15) சொதப்பினர். பேர்ஸ்டோவ் 41 பந்தில் 82 ரன்கள் விளாசினார். கேப்டன் மார்கன், மொயீன் அலி ‘டக்’ அவுட்டாக, 137/6 ரன் என திணறியது. அடுத்து சாம் பில்லிங்ஸ் (46), வில்லே (47) கைகொடுக்க, இங்கிலாந்து அணி 32.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்து, 4 விக்கெட்டில் வென்றது. ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் ஒருநாள் தொடரை 2–0 என கைப்பற்றியது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?