Advertisement


பயிற்சி...சென்னை புது முயற்சி! * முன்னதாக எமிரேட்ஸ் செல்ல முடிவு

ஆகஸ்ட் 01, 2020 21:18
 Comments  
 


Chennai Super Kings want IPL camp in UAE from early August
 

சென்னை: ஐ.பி.எல்., தொடருக்கு தயாராக புதிய முயற்சியாக, சென்னை அணி வீரர்கள் விரைவில் யு.ஏ.இ., செல்ல திட்டமிட்டுள்ளனர். 

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இத்தொடர் வரும் செப். 19–நவ. 8ல் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கவுள்ளது. 51 நாட்களில் 60 போட்டிகள் நடக்கவுள்ளன. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் இதற்கான பணிகள் வேகமெடுக்க உள்ளன.

கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக போட்டிகள் நடக்கவில்லை. இதனால் சிறப்பாக தயாராகும் வகையில், ஒருமாதம் முன்னதாக (ஆக. 20, 21) யு.ஏ.இ., செல்ல அணி உரிமையாளர்கள்  அனுமதி கேட்டுள்ளனர். 

சென்னை அணியை பொறுத்தவரையில் ‘சீனியர்கள்’ அதிகம் உள்ளனர். இவர்கள் தயாராக கூடுதல் அவகாசம் தேவைப்படும். கேப்டன் தோனி, 2019 உலக கோப்பை தொடருக்குப் பின் எவ்வித போட்டியிலும் களமிறங்கவில்லை. 

இதனால் தான் கடந்த மார்ச் முதல் வாரத்தில் சென்னை அணி வீரர்கள் பயிற்சியை துவக்கினர். துணைக் கேப்டன் ரெய்னா, அம்பதி ராயுடு உள்ளிட்டோர் கடந்த 2019, டிச.,ல் தங்களது பயிற்சியை துவக்கினர். 

தற்போது சென்னை அணி வீரர்கள் அனைவரும் ஆக. 9ல் சென்னைக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இங்கிருந்து தனி விமானத்தில் முதல் அணியாக யு.ஏ.ஐ., சென்று, அங்கு முன்னதாக பயிற்சியை துவக்க முயற்சித்து வருகின்றனர். 

 

வார்னர் வர தாமதம்

இங்கிலாந்து செல்லும் ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இத்தொடர் செப். 16ல் துவங்க உள்ளது. இதன் பின் யு.ஏ.இ., வந்தாலும் குறைந்தது ஒருவாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதேநேரம் 13வது ஐ.பி.எல்., தொடர் செப். 19ல் துவங்குகிறது. இதனால் ஆஸ்திரேலியாவின் வார்னர், ஸ்மித், கம்மின்ஸ் மற்றும் இங்கிலாந்தின் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் முதல் வாரத்தில் போட்டிகளில் பங்கேற்க முடியாது.

 

இன்று முடிவு?

ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடக்கிறது. இதில் அட்டவணை, தொடர் நடத்துவதற்கான திட்ட அறிக்கை, அன்னிய வீரர்கள் வருகை மற்றும் வீரர்கள் குடும்பத்தினர் செல்வது என பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?