Advertisement


ஆஸி.,க்கு பதிலடி எப்படி *கும்ளே திட்டம்

ஆகஸ்ட் 01, 2020 21:15
 Comments  
 


Decided against pulling out of 2008 Australia tour to set example, Kumble
 

புதுடில்லி: ‘‘ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்கவே, 2008 தொடரில் தொடர்ந்து பங்கேற்றோம்,’’ என கும்ளே தெரிவித்தார்.

கடந்த 2008ல் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் இந்தியா 1–2 என தோற்றது. 2 வது டெஸ்ட் சிட்னியில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்சை ‘குரங்கு’ என ஹர்பஜன் கூறியதாக பிரச்னை வெடித்தது. அம்பயராக இருந்த ஸ்டீவ் பக்னர் (விண்டீஸ்) தவறான தீர்ப்புகள் வழங்க, இந்தியா தோற்றது.

விசாரணை முடிவில் ஹர்பஜனுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்த இந்தியா தொடரில் இருந்து விலகி, நாடு திரும்ப முடிவு செய்தது. பின் ஹர்பஜனுக்கு அபராதம் மட்டும் விதித்தனர். இந்த சம்பவம் குறித்து அப்போதைய கேப்டன் கும்ளே கூறியது:

பொதுவாக கேப்டன்கள் களத்தில் முடிவெடுத்து தான் பார்த்திருப்பர். இத்தொடரில் கிரிக்கெட்டின் நலனுக்கு ஏற்ப, களத்துக்கு வெளியே சில முடிவுகள் எடுக்க வேண்டியது இருந்தது. அணியாக இணைந்து தொடரில் இருந்து விலக முடிவு செய்தோம்.

இந்திய அணிக்கு தவறு இழைக்கப்பட்டது. அதனால் தான் திரும்பினர் என மக்கள் ஏற்றுக் கொள்வர். ஆனால் கேப்டன் என்ற முறையில் முன்னுதாரணமாக இருக்க விரும்பினேன். மீதமுள்ள இரண்டு டெஸ்டில் வென்று, பதிலடி கொடுத்து தொடரை ‘டிரா’ செய்ய முடிவெடுத்தோம். இது ரசிகர்களுக்கு சிறந்த செய்தியாக இருக்கும் என திட்டமிட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?