Advertisement


டி.என்.பி.எல்., மீண்டும் ஒத்திவைப்பு

ஆகஸ்ட் 01, 2020 20:50
 Comments  
 


Tamil Nadu Premier League, TNPL T20, Cricket, Postponed
 

சென்னை: டி.என்.பி.எல்., கிரிக்கெட் தொடரின் 5வது சீசன் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் 2016ம் ஆண்டு முதல், தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடக்க இருந்த 5வது சீசன் (ஜூன் 10 – ஜூலை 12) கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இத்தொடர், ஆகஸ்ட்–செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக., 31 வரை எவ்வித விளையாட்டு போட்டிகளையும் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. தவிர, செப்டம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) 13வது ஐ.பி.எல்., தொடர் நடக்க உள்ளது. இதனால் அஷ்வின் (டில்லி), முரளி விஜய் (சென்னை), தினேஷ் கார்த்திக் (கோல்கட்டா), விஜய் சங்கர் (ஐதராபாத்) உள்ளிட்ட முன்னணி தமிழக வீரர்கள் ஐ.பி.எல்., விளையாட சென்றுவிடுவர். இதன்பின், ரஞ்சி கோப்பை நடக்கிறது. இதனால் இத்தொடர் ரத்தாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டி.என்.சி.ஏ., செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி கூறுகையில், ‘‘டி.என்.பி.எல்., தொடரை ஜூலை அல்லது ஆகஸ்ட் முதல் செப்டம்பர் இறுதிக்குள் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், இத்தொடரை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை. வரும் நவம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்த முயற்சிக்கிறோம்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?