Advertisement


ரொனால்டோவை முந்திய ‘ஐ.எஸ்.எல்.,’

ஜூலை 31, 2020 21:29
 Comments  
 


ISL 4 th Most Engaging Football League in the World on Instagram
 

மும்பை: உலகளவில் நான்காவது இடம் பெற்று ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் அசத்தியுள்ளது.

இந்தியாவில் ஐ.எஸ்.எஸ்., கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் ஆறாவது சீசனில் (2019–2020) கோல்கட்டா அணி சாம்பியன் ஆனது. இத்தொடர் உலகளவில் நான்காவது இடம் பெற்றுள்ளதாக ஸ்பெயின் ஸ்போர்ட்ஸ் பிசினஸ் மைய ஆராய்ச்சி தெரிவித்தது. 

2020, ஜன. 1 முதல் ஜூன் 30 வரை இத்தொடர் குறித்த செய்திகளை ‘இன்ஸ்டாகிராமில்’ 3.81 கோடி பேர் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துள்ளனர். இது இத்தாலி ‘சீரி ஏ’ தொடரை விட இரண்டு மடங்கு அதிகம். உலக கால்பந்தின் முன்னணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் யுவன்டஸ் அணி இத்தொடரில் பங்கேற்ற போதும் 1.81 கோடி பேர் தான் பகிர்ந்தனர்.

முதல் மூன்று இடங்களில் ஸ்பெயினின் லா லிகா (31.9 கோடி பேர்), இங்கிலாந்தின் பிரிமியர் லீக் (29.6 கோடி), ஜெர்மனியின் பண்டஸ்லிகா (28.1 கோடி) தொடர்கள் பிடித்தன. வரும் ஏழாவது ஐ.எஸ்.எல்., தொடர், உலகளவில் மூன்றாவது இடம் பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு முடிவு தெரிவித்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?