Advertisement


ஆஷ்லே பார்டி விலகல்

ஜூலை 30, 2020 21:14
 Comments  
 


Ashleigh Barty, Australia, Tennis, US Open, Pulled Out
 

மெல்போர்ன்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஆஷ்லே பார்டி விலகினார்.

ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்டி 24. கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற இவர், டபிள்யு.டி.ஏ., தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார். கொரோனா காரணமாக போட்டிகள் எதுவும் இல்லாததால் வீட்டில் முடங்கினார்.

இந்நிலையில் ஆஷ்லே பார்டி, கொரோனா அச்சம் காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கவுள்ள வெஸ்டர்ன் மற்றும் சதர்ன் ஓபன் (ஆக. 22–28), யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் (ஆக. 31 – செப். 13) தொடர்களில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து ஆஷ்லே பார்டி கூறுகையில், ‘‘வெஸ்டர்ன் மற்றும் சதர்ன் ஓபன், யு.எஸ்., ஓபன் என இரு தொடர்களும் முக்கியமானது. எனினும் உடல் நலன், பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத்தொடர்களில் இருந்து விலகுகிறேன். இது கடினமான முடிவு,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?