Advertisement


விவசாயம் செய்யும் இந்திய கேப்டன்

ஜூலை 29, 2020 22:00
 Comments  
 


Amarjit Singh Kiyam, Soccer, India, Agriculture, Cultivation
 

புதுடில்லி: கொரோனா காரணமாக போட்டிகள் எதுவும் இல்லாததால் இந்திய கால்பந்து அணியின் (17 வயது) முன்னாள் கேப்டன் அமர்ஜித் சிங் கியாம், தனது சொந்த கிராமத்தில் விவசாயம் செய்தார்.

இளம் இந்திய கால்பந்து வீரர் அமர்ஜித் சிங் கியாம் 19. மணிப்பூரில் பிறந்த இவர், 2017ல் நடந்த ‘பிபா’ உலக கோப்பை (17 வயது) தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். கடந்த ஆண்டு இந்திய சீனியர் அணியில் இடம் பிடித்த இவர், இதுவரை 5 போட்டியில் விளையாடி உள்ளார். ‘ஐ–லீக்’ தொடரில் இந்தியன் ஆரோஸ் அணிக்காக பங்கேற்கிறார்.

கொரோனா காரணமாக இந்தியாவில் போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை. தவிர இந்திய கால்பந்து அணியின் பயிற்சி முகாம் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து அமர்ஜித் சிங், மணிப்பூரில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு சென்று, தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வருகிறார்.

இதுகுறித்து அமர்ஜித் சிங் கூறுகையில், ‘‘எனது குடும்பம் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகிறது. ஆனால், நான் சிறு வயதில் இருந்து விவசாயத்தில் கவனம் செலுத்தவில்லை. கால்பந்து விளையாடுவதில் மட்டுமே ஆர்வம் காட்டினேன். தற்போது எனது குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்காக விவசாயம் செய்கிறேன். இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இதனால் பெருமை கொள்கிறேன்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?