Advertisement


உலகை சந்திக்க பயமாக இருந்தது * ஷரபோவா சோகம்

ஜூலை 25, 2020 21:33
 Comments  
 


Sharapova opens up on heartbreaking doping ban
 

மாஸ்கோ: ‘‘ஊக்கமருந்து விஷயத்தில் குற்றம் செய்து விட்டீர்களாமே, என சொல்லிய உலகை சந்திக்க வேண்டும் என்பதை நினைத்தாலே மிகவும் கடினமாக இருந்தது,’’ என ஷரபோவா தெரிவித்தார். 

ரஷ்ய முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா 33. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 5 கோப்பை வென்றார். 2016, ஜன.,ல், இவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதாக 15 மாதங்கள் தடை விதிக்கப்பட்டார். இதிலிருந்து மீண்டு, போட்டிகளில் பங்கேற்ற போதும் பெரிய வெற்றிகள் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு பிப்.,ல் ஓய்வு பெற்றார். இவரது வாழ்க்கை குறித்த ஆவணப்படத்தில், ஷரபோவா கூறியது:

எப்போதும் போல அன்றைய தின பயிற்சிகள் குறித்த எண்ணத்துடன் எழுந்தேன். ஆனால் ‘நீங்கள் குற்றம் செய்து விட்டீர்களாமே’ என்று சொல்லிய உலகை சந்திக்க வேண்டும் என்பதை நினைத்தாலே மிகவும் கடினமாக இருந்தது. பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் என்னை நானே பாதுகாத்துக் கொள்ளும் வகையில், எனது அலைபேசியில் இருந்த அனைத்து சமூக வலைத்தள பக்கங்களையும் அழித்து விட்டேன்.

பல்வேறு அறிவுரைகள், கருத்துக்களில் இருந்து என்னை பாதுகாக்க ஒதுங்கிக் கொண்டேன். மக்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றனர் என்பது குறித்து ஒருபோதும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் திடீரென இப்படி நிகழ்ந்தது எனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இது விரும்பத்தகாத உணர்வை ஏற்படுத்தியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?