Advertisement


ஆஸி., ஓபன்: ரசிகர்களுக்கு அனுமதி

ஜூலை 25, 2020 21:28
 Comments  
 


Australian Open Tennis, Fans Allowed
 

மெல்போர்ன்: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மிகக் குறைந்த அளவில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது.

நடப்பு ஆண்டின் முதலாவது ‘கிராண்ட்ஸ்லாம்’ டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போர்னில் நடந்தது. இதன் ஒற்றையரில் ஜோகோவிச் (செர்பியா), சோபியா கெனின் (அமெரிக்கா) கோப்பை வென்றனர். அதன்பின், கொரோனா பரவல் காரணாமாக பிரெஞ்ச் ஓபன் ஒத்திவைக்கப்பட்டது. விம்பிள்டன் ரத்தானது. யு.எஸ்., ஓபன் வரும் ஆக. 31ல் துவங்குகிறது.

 

இந்நிலையில் அடுத்த ஆண்டின் முதலாவது ‘கிராண்ட்ஸ்லாம்’ தொடரான ஆஸ்திரேலிய ஓபனை நடத்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட உள்ளது. இதில் மிகக் குறைந்த அளவில் உள்ளூர் ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், பந்து எடுத்து கொடுக்கும் சிறுவர், சிறுமியர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இவர்கள், தனிமைப்படுத்திக் கொள்ளுதல், கொரோனா பரிசோதனை போன்ற விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

தவிர, இந்த ஆண்டு நடக்கவுள்ள பிரெஞ்ச் ஓபன் மற்றும் யு.எஸ்., ஓபனை அடிப்படையாக கொண்டு, ஆஸ்திரேலிய ஓபன் நடத்தப்படும் என, டென்னிஸ் ஆஸ்திரேலியாவின் தலைமை அதிகாரி கிரெய்க் டைலி தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?