Advertisement


செரினா மகள் உரிமையாளர்

ஜூலை 22, 2020 21:42
 Comments  
 


Serena Williams daughter Olympia becomes youngest pro sports team owner
 

லாஸ் ஏஞ்சல்ஸ்: பெண்கள் கால்பந்து அணி சக உரிமையாளர் ஆகினார் செரினா மகள் ஒஹானியன்.

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் 38. இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இவரது கணவர் அலெக்சிஸ் ஒஹானியன். இவர்களுக்கு ஒஹானியன் ஜூனியர் 2, என்ற மகள் உள்ளார்.

இதனிடையே 2022ல் நடக்கவுள்ள அமெரிக்க தேசிய பெண்கள் கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணியின் சக உரிமையாளர் ஆனார் ஒஹானியன் ஜுனியர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை அடிப்படையாக கொண்ட இந்த அணிக்கு ‘ஏஞ்சல் சிட்டி’ என பெயரிடப்பட்டது. இதையடுத்து தொழில்ரீதியான போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு அணிகளின் இளம் வயது உரிமையாளர் என்ற பெருமை பெற்றார்.

இதுகுறித்து அலெக்சிஸ் கூறுகையில்,‘‘தனிப்பட்ட முறையில் எனது குடும்பத்திற்காக இதில் முதலீடு செய்துள்ளேன். எனது இரண்டு வயது மகளுடன் மணிக்கணக்கில் கால்பந்தை உதைத்து நேரம் செலவிடுகிறேன். இதனால் பெண்கள் கால்பந்து புரட்சியில் அவள் முதல் வரிசையில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஏனெனில் நானும், மனைவி செரினாவும், மகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க விரும்புகிறோம்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?