Advertisement


லோகேஷ் ராகுல் ஏமாற்றம்

ஜூன் 25, 2020 21:19
 Comments  
 


IPL, T20 Cricket, KL Rahul, Punjab
 

புதுடில்லி: ‘‘ஐ.பி.எல்., தொடர் ஒத்திவைக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது,’’ என, லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், கடந்த மார்ச் 29ல் துவங்க இருந்த 13வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சீசன், கொரோனா அச்சம் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இம்முறை பஞ்சாப் அணியின் கேப்டனாக லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், சக வீரர்களான மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல் ஆகியோருடன் ‘ஆல்லைன்’ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

மயங்க் அகர்வால் கேள்விக்கு லோகேஷ் ராகுல் கூறுகையில், ‘‘ஐ.பி.எல்., தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளேன். ஏனெனில் இம்முறை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதால், இது எனக்கு மிகவும் முக்கியமான தொடராக பார்க்கிறேன். பஞ்சாப் அணியில் கெய்ல், மேக்ஸ்வெல், அகர்வால் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த வீரர்கள் இடம் பெற்றிருப்பது சிறப்பு. இவர்களை வழிநடத்த இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இத்தொடரை ‘மிஸ்’ செய்கிறேன்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?