Advertisement


ரியல் மாட்ரிட் மீண்டும் முதலிடம்

ஜூன் 25, 2020 21:13
 Comments  
 


La Liga, Soccer, Real Madrid, Mallorca, Luka Romero, Argentina
 

மாட்ரிட்: ‘லா லிகா’ கால்பந்து லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2–0 என, மல்லோர்கா அணியை வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.

ஸ்பெயினில், உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் ‘லா லிகா’ கால்பந்து தொடர் நடக்கிறது. மாட்ரிட் நகரில் நடந்த லீக் போட்டியில் ரியல் மாட்ரிட், மல்லோர்கா அணிகள் மோதின. அசத்தலாக ஆடிய ரியல் மாட்ரிட் அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த அணிக்கு வினிசியஸ் ஜூனியர் (19வது நிமிடம்), செர்ஜியோ ராமோஸ் (56வது) தலா ஒரு கோலடித்து கைகொடுத்தனர்.

இதுவரை விளையாடிய 31 போட்டியில், 20 வெற்றி, 8 தோல்வி, 3 ‘டிரா’ என, 68 புள்ளிகளுடன் ரியல் மாட்ரிட் அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. பார்சிலோனா அணி (68 புள்ளி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

புதிய வரலாறு: இப்போட்டியில் மல்லோர்கா அணி சார்பில் இளம் வீரர் லுகா ரோமெரோ அறிமுகமானார். இதன்மூலம் ‘லா லிகா’ கால்பந்து அரங்கில் குறைந்த வயதில் (15 ஆண்டு, 219 நாட்கள்) அறிமுகமான வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார். இதற்கு முன், 1939ல் செல்டா டி விகோ அணிக்காக ஸ்பெயினின் சான்சன் (15 ஆண்டு, 255 நாட்கள்) குறைந்த வயதில் அறிமுகமாகி இருந்தார்.

மெக்சிகோவில் பிறந்த ரோமெரோவின் பெற்றோர்கள் அர்ஜென்டினாவை சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு 15 வயதுக்குட்பட்டோருக்கான அர்ஜென்டினா அணியில் அறிமுகமான இவரை ‘மெக்சிகோ மெஸ்சி’ என்று அங்குள்ள மீடியாவில் அழைக்கப்பட்டார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?