Advertisement


ஜோகோவிச்சிற்கு கொரோனா * டென்னிஸ் அரங்கில் அதிர்ச்சி

ஜூன் 23, 2020 22:17
 Comments  
 


Djokovic statement after testing positive for coronavirus
 

பெல்கிரேடு: உலகின் ‘நம்பர்–1’ டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச் 33. உலகின் ‘நம்பர்–1’ வீரர். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ரூ. 8 கோடி நிதி வழங்கினார். ‘வென்டிலேட்டர்’ உள்ளிட்ட மருத்து கருவிகளும் இலவசமாக கொடுத்தார்.

இதனிடையே ‘அட்ரியா தொடர்’ என்ற பெயரில் ஜோகோவிச், கண்காட்சி டென்னிஸ் தொடர் நடத்த முடிவு செய்தார். முதல் தொடர் செர்பியாவின் பெல்கிரேடில் நடந்தது. அடுத்து குரோஷியாவில் நடந்தது. இதில் சமூக இடைவெளியை ரசிகர்கள் பின்பற்றவில்லை என புகார் எழுந்தது.

இதையடுத்து டென்னிஸ் வீரர்கள் உட்பட 1000 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. முடிவில் உலகத் தரவரிசையில் 19வது இடத்திலுள்ள கிரிகர் டிமிட்ரோவ் (பல்கேரியா), குரோஷிய வீரர் போர்னா கோரிச், டிராய்க்கி (செர்பியா) மற்றும் 5 வீரர்கள், ஒரு பயிற்சியாளர் என 9 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதையடுத்து குரோஷியாவில் ஜோகோவிச் விளையாட இருந்த பைனல் உட்பட தொடர் முழுவதும் ரத்தானது. பெல்கிரேடு திரும்பிய ஜோகோவிச், சோதனை செய்து கொண்டார். எவ்வித அறிகுறியும் இல்லாத போதும், இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. ஜோகோவிச் மனைவி ஜெலினாவுக்கும் தொற்று இருப்பது தெரியவர, இருவரும் 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்தப்படுத்திக் கொண்டனர்.


வருத்தம்

ஜோகோவிச் கூறுகையில்,‘‘எனக்கும், மனைவி ஜெலினாவுக்கும் கொரோனா இருப்பது சோதனையில் உறுதியானது. குழந்தைகளுக்கு தொற்று இல்லை. பல்வேறு தொடர்கள் ரத்தான நிலையில் தென் கிழக்க ஐரோப்பிய வீரர்களுக்கு பயன் தரவும், தேவைப்படுபவர்களுக்கு நிதியுதவி தரும் நல்லெண்ணத்தில் தான் இத்தொடர் நடத்தப்பட்டது. வைரஸ் பரவல் குறைந்து விட்டது என்ற நினைத்தோம். துரதிருஷ்டவசமாக இன்னும் குறையவில்லை. இதனுடன் எப்படி வாழ்வது என்பதை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். காலப்போக்கில் இது சுலபமாகி விடும் என நம்புகிறேன். இத்தொடரினால் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களிடம் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பெரியளவில் பாதிக்காமல் எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?