Advertisement


டென்னிஸ் வீரர்களுக்கு ‘கொரோனா’ * கண்காட்சி தொடர் ரத்து

ஜூன் 22, 2020 21:39
 Comments  
 


Dimitrov positive for COVID 19, exhibition event canceled
 

வாஷிங்டன்: பல்கேரிய டென்னிஸ் வீரர் டிமிட்ரோவ், குரோஷியாவின் கோரிச்சிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. 

உலகின் ‘நம்பர்–1’ டென்னிஸ் வீரர் செர்பியாவின் ஜோகோவிச். சக வீரர்களுடன் இணைந்து கண்காட்சி டென்னிஸ் தொடர் நடத்த முடிவு செய்தார். அட்ரியாவில் முதல் தொடர் நடந்தது. இதில் சமூக இடைவெளியே ரசிகர்கள் பின்பற்றவில்லை என புகார் எழுந்தது. 

டென்னிஸ் வீரர்கள் உட்பட 1000 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. உலகத் தரவரிசையில் 19வது இடத்திலுள்ள பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து குரோஷியாவில் ஜோகோவிச் விளையாட இருந்த பைனல் உட்பட தொடர் முழுவதும் ரத்தானது. 

டிமிட்ரிரோவுக்கு எதிராக விளையாடிய மற்றொரு முன்னணி வீரர் குரோஷியாவின் போர்னா கோரிச்சிற்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. தவிர செர்பிய கிளப்பின் 5 வீரர்களுக்கும் தொற்று இருப்பது தெரிந்தது. அடுத்தடுத்து பல வீரர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால், ஜோகோவிச்சும் பெல்கிரேடு சென்று சோதனை செய்து கொண்டார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?