Advertisement


ஐ.பி.எல்., தொடரில் விளையாடுவேன்: ஸ்ரீசாந்த் நம்பிக்கை

ஜூன் 21, 2020 21:46
 Comments  
 


Sreesanth, Cricket, India, Indian Premier League
 

கொச்சி: ‘‘உள்ளூர் போட்டியில் திறமையை நிரூபித்து, மீண்டும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடுவேன்,’’ என, ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் 37. இவர் இதுவரை 27 டெஸ்ட் (87 விக்கெட்), 53 ஒருநாள் (75), 10 சர்வதேச ‘டுவென்டி–20’ (7) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கேரளாவை சேர்ந்த இவர், 2013ல் நடந்த ஐ.பி.எல்., தொடரில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதால் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டார். இவரது 7 ஆண்டு தடை காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் இவர், ரஞ்சி கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறியது: ஊரடங்கால் கிடைத்த ஓய்வு நேரத்தில், என்.பி.ஏ., கூடைப்பந்து பயிற்சியாளரான டிம் குரோவர், ‘ஆல்லைன்’ முறையில் நடத்திய மனவலிமை பயிற்சி வகுப்பில் பங்கேற்றேன். தினமும், எர்ணாகுளத்தில் உள்ள உள்ளரங்கு பயிற்சி கூடத்தில் இளம் கேரள அணியினருடன் வலைப்பயிற்சியில் ஈடுபடுகிறேன்.

இந்த ஆண்டு நடக்கவுள்ள ரஞ்சி கோப்பையில் விளையாட காத்திருக்கிறேன். இதில் திறமையை நிரூபிக்கும் பட்சத்தில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல்., வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பேன். இதில் ஏதாவது ஒரு அணிக்கு தேர்வாகி, மீண்டும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கிருந்து வெளியேற்றப்பட்டேனோ, அங்கு மீண்டும் தடம் பதிப்பேன்.

மீண்டும் போட்டியில் விளையாடும் போது மக்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம் உள்ளது. ஆனால், அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?