Advertisement


முன்னாள் கேப்டனுக்கு ‘பத்ம ஸ்ரீ’: இந்திய கால்பந்து கூட்டமைப்பு பரிந்துரை

ஜூன் 17, 2020 22:17
 Comments  
 


IM Vijayan, All India Football Federation,Padma Shri Award, Recommended
 

புதுடில்லி: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் விஜயன் பெயர் ‘பத்ம ஸ்ரீ’ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் ‘பத்ம’ விருதுகள் அறிவிக்கப்படும். கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதிக்கும் நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும். இதில், நான்காவது இடத்தில் உள்ள ‘பத்ம ஸ்ரீ’ விருதுக்கு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஐ.எம். விஜயன் 51, பெயரை அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) பரிந்துரை செய்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்த விஜயன், 1989ல் இந்தியாவுக்காக கால்பந்து போட்டியில் அறிமுகமானார். மொத்தம் 79 போட்டியில், 40 கோல் அடித்துள்ளார். கடந்த 2000 முதல் 2003 வரை இந்திய அணியை வழிநடத்தினார். தவிர இவர், உள்ளூர் போட்டிகளில் கேரளா போலீஸ், மோகன் பகான், ஜே.சி.டி. மில்ஸ், எப்.சி. கொச்சின், ஈஸ்ட் பெங்கால், சர்ச்சில் பிரதர்ஸ் அணிகளுக்காக பங்கேற்றார். கடந்த 2003ல் அர்ஜுனா விருது வென்ற இவர், 3 முறை (1993, 97, 99) சிறந்த இந்திய கால்பந்து வீரருக்கான விருது வென்றார்.

இதுகுறித்து விஜயன் கூறுகையில், ‘‘பத்ம ஸ்ரீ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி. இதற்காக அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு நன்றி. விருது கிடைத்தால் நன்றாக இருக்கும்,’’ என்றார்.

ஏற்கனவே கால்பந்து சார்பில் சைலன் மன்னா (1971), சுனி கோஸ்வாமி (1983), பி.கே. பானர்ஜி (1990), பாய்ச்சங் பூட்டியா (2008), சுனில் செத்ரி (2019), பெம்பெம் தேவி (2020) ஆகியோர் ‘பத்ம ஸ்ரீ’ விருது வென்றிருந்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?