Advertisement


பயிற்சியை துவக்கினார் குன்னேஸ்வரன்

ஜூன் 13, 2020 21:30
 Comments  
 


Prajnesh Gunneswaran, Sasikumar Mukund, Manish Sureshkumar, Tennis, Tamil Nadu Tennis Association, Practice
 

சென்னை: குன்னேஸ்வரன், சசிகுமார் உள்ளிட்ட தமிழக டென்னிஸ் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒட்டுமொத்த டென்னிஸ் போட்டிகளும் பாதிக்கப்பட்டன. பிரெஞ்ச் ஓபன் ஒத்திவைக்கப்பட்டது. விம்பிள்டன் ரத்தானது. ஊரடங்கால் டென்னிஸ் நட்சத்திரங்கள் வீட்டில் முடங்கினர்.

சமீபத்தில் இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள், மைதானத்திற்கு சென்று பயிற்சி மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து தமிழக டென்னிஸ் சங்கம் (டி.என்.டி.ஏ.,) சார்பில் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், சசிகுமார் முகுந்த், மணிஷ் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவர்கள் மூவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர்.

இதுகுறித்து ஏ.டி.பி., தரவரிசையில் 132வது இடத்தில் உள்ள குன்னேஸ்வரன் கூறுகையில், ‘‘நீண்ட நாட்களுக்கு பின் பயிற்சி மேற்கொண்டதில் மகிழ்ச்சி. மீண்டும் இயல்பான நிலைக்கு திரும்ப சிறிது நாட்கள் தேவைப்படும். ஓய்வில் இருந்ததால் பயிற்சியை மெதுவாக துவக்கினேன்’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?