Advertisement


பயிற்சி என்றாலே பயம் * அச்சத்தில் இந்திய நட்சத்திரங்கள்

மே 22, 2020 22:45
 Comments  
 


Most sportspersons wary of returning to outdoor training
 

புதுடில்லி: மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும், மைதானங்களில் பயிற்சியில் ஈடுபட இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. நான்காவது கட்ட ஊரடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன் படி விளையாட்டு நட்சத்திரங்கள் தனிப்பட்ட முறையில் மைதானங்களுக்கு சென்று பயிற்சியில் ஈடுபட அனுமதி தரப்பட்டன.

இதுகுறித்து இந்தியாவின் இளம் துப்பாக்கிசுடுதல் வீராங்கனை மனு பாகர் 18, கூறுகையில்,‘‘ இப்போதைய நிலையில் மைதானத்துக்கு சென்று பயிற்சியில் ஈடுபடும் எண்ணம் கிடையாது. ஏற்கனவே வீட்டில் அமைக்கப்பட்ட இடத்தில் பயிற்சி செய்கிறேன். வீட்டை விட்டு வெளியேறும் பேச்சிற்கே இடமில்லை. சர்வதேச போட்டிகள் துவங்கினால் பங்கேற்பேன்,’’ என்றார்.

முடிவு செய்யவில்லை

டேபிள் டென்னிஸ் வீரர், தமிழகத்தின் அஜந்தா சரத்கமல் கூறுகையில்,‘‘ பயிற்சிக்கு திரும்புவது நல்லது தான் என்றாலும் சென்னையில், தினமும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் எப்போது மைதானம் செல்வது, பயிற்சி செய்வது என இன்னும் முடிவெடுக்கவில்லை. ஏனெனில் வெளியே செல்லவே பயமாக உள்ளது,’’ என்றார்.

இந்தியாவின் ‘நம்பர்–2’ டென்னிஸ் வீரர், தமிழகத்தின் குன்னேஸ்வரன் கூறுகையில்,‘‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் அனைத்தும் திறக்கப்பட்டு விடும் என நம்புகிறேன். இதன் பின் முடிந்தவரை பாதுகாப்பான முறையில் நமது வழக்கமான செயல்களை துவங்கலாம். டென்னிஸ் கோர்ட்டில் அதிகமாக யாரும் இருக்க மாட்டர் என்பதால், அடுத்த வாரம் பயிற்சியை துவக்க உள்ளேன்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?