Advertisement


கொரியா அணிக்கு அபராதம்?

மே 20, 2020 21:58
 Comments  
 


K League Football, FC Seoul, Plastics Dolls
 

சியோல்: போட்டியில் பிளாஸ்டிக் பொம்மைகளை ரசிகைகளாக பயன்படுத்திய எப்.சி., சியோல் அணிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

தென் கொரியாவில் நடக்கும் ‘கே–லீக்’ கால்பந்து தொடர் ‘கொரோனா’ காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கடந்த மே 8ல் இத்தொடர் மீண்டும் துவங்கியது. சமீபத்தில் சியோலில் நடந்த போட்டியில் எப்.சி., சியோல் 1–0 என்ற கோல் கணக்கில் குவாங்ஜு எப்.சி., அணியை வீழ்த்தியது.

கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், இப்போட்டியில் சியோல் அணி சார்பில் பிளாஸ்டிக் பொம்மைகள் ரசிகைகளாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இது பாலியல் பொம்மைகள் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டவை என்று எதிர்ப்புகள் கிளம்பின. ஏனெனில் இப்பொம்மைகள் அணிந்திருந்த ‘டி–சர்ட்’ மற்றும் விளம்பர போர்டில் அந்த நிறுவனத்தின் ‘லோகோ’ இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ‘கே–லீக்’ கால்பந்து ஒழுங்கு நடவடிக்கை குழு எப்.சி., சியோல் அணியிடம் விசாரணை நடத்த உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த அணிக்கு 5 லீக் புள்ளிகள் குறைக்கப்படும் அல்லது ரூ. 38 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்படலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?