Advertisement


காலி மைதானத்தில் டென்னிஸ்: விஜய் அமிர்தராஜ் எதிர்பார்ப்பு

மே 20, 2020 21:54
 Comments  
 


Vijay Amritraj, Tennis, India, Empty Stadium Matches
 

சென்னை: ‘‘டென்னிஸ் போட்டிகள் இந்த ஆண்டு காலி மைதானத்தில் நடத்தப்படலாம்,’’ என, விஜய் அமிர்தராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒட்டுமொத்த டென்னிஸ் போட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பிரெஞ்ச் ஓபன் ஒத்திவைக்கப்பட்டது. விம்பிள்டன் ரத்தானது. இதுகுறித்து தமிழக டென்னிஸ் சங்க (டி.என்.டி.ஏ.,) தலைவர் விஜய் அமிர்தராஜ் கூறியது: டென்னிஸ் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் உலகின் முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச், ரபெல் நடால் ஆகியோருக்கு பொருளாதார ரீதியிலும், போட்டிக்கு தயாராவதிலும் எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் இது, தரவரிசையில் பின்தங்கிய நட்சத்திரங்கள் பாதிப்பை உண்டாக்கும். இது இந்திய டென்னிஸ் நட்சத்திரங்களுக்கும் பொருந்தும். போட்டிகள் இல்லாததால் அனைவரும் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளனர். இதனால் போட்டிக்கு தயாராவதில் சிக்கல் எழுந்துள்ளது.

ஒருவேளை இந்த ஆண்டு டென்னிஸ் போட்டிகள் துவங்கினால் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று எதிர்பார்க்கிறேன். மற்ற நாடுகளில் உள்ள சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு போட்டிகள் துவங்கப்படும். சமூக இடைவெளி மற்றும் பயணக் கட்டுப்பாடு போன்றவை டென்னிஸ் போட்டிகளை மீண்டும் துவக்குவதில் பின்னடைவு ஏற்படுத்துகின்றன.

இவ்வாறு விஜய் அமிர்தராஜ் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?