Advertisement


அன்கிதாவுக்கு ‘அர்ஜுனா’?: டென்னிஸ் சங்கம் பரிந்துரை

மே 17, 2020 22:51
 Comments  
 


Ankita Raina, Divij Sharan, Arjuna award, Nominated, All India Tennis Association, Nandan Bal, Dhyan Chand Award
 

புதுடில்லி: இந்திய டென்னிஸ் நட்சத்திரங்களான அன்கிதா ரெய்னா, திவிஜ் சரண் பெயர்கள் ‘அர்ஜுனா’ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

விளையாட்டுத்துறையில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் ‘அர்ஜுனா’ விருது வழங்கப்படும். இதற்கான பரிந்துரை பட்டியலை வரும் ஜூன் 3ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அனைத்து இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) சார்பில் இந்த ஆண்டுக்கான ‘அர்ஜுனா’ விருதுக்கு திவிஜ் சரண், அன்கிதா ரெய்னா பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா 27, கடந்த 2018ல் நடந்த ஆசிய விளையாட்டு ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றார். இதே ஆண்டு நடந்த பெடரேஷன் கோப்பை ஒற்றையரில் 4 போட்டியிலும் வென்றார். இந்த ஆண்டு நடந்த பெடரேஷன் கோப்பையில் 8 போட்டியில் விளையாடிய இவர், ஒற்றையரில் 2, இரட்டையரில் 3 வெற்றிகளை பதிவு செய்து இந்திய அணியை ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேற உதவினார். டபிள்யு.டி.ஏ., மற்றும் ஐ.டி.எப்., போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இவர், கடந்த மார்ச் மாதம் வெளியான தரவரிசையில் முதன்முறையாக 160வது இடத்துக்கு முன்னேறினார்.

இந்திய வீரர் திவிஜ் சரண் 34, கடந்த 2018ல் நடந்த ஆசிய விளையாட்டு இரட்டையரில் தங்கம் வென்றார். கடந்த சீசனில் இரட்டையரில் 2 ஏ.டி.பி., பட்டம் வென்றிருந்தார்.

முன்னாள் டேவிஸ் கோப்பை பயிற்சியாளர் நந்தன் பால் 60, பெயரை சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாசாரியா விருது அல்லது வாழ்நாள் சாதனையாளருக்கான தயான் சந்த் விருதுக்கு பரிந்துரைக்க ஏ.ஐ.டி.ஏ., ஆலோசித்து வருகிறது. இவரது பெயரை தயான் சந்த் விருதுக்கு பரிந்துரைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஏ.ஐ.டி.ஏ., செயலாளர் ஹிரோன்மாய் சாட்டர்ஜீ கூறுகையில், ‘‘இந்த ஆண்டு அர்ஜுனா விருதுக்கு திவிஜ் சரண், அன்கிதா ரெய்னா தகுதியானவர்கள். நந்தனுக்கு எந்த விருது பொருத்தமானது என்பதை ஆலோசித்து வருகிறோம்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?