Advertisement


செரினா வில்லியம்ஸ் ஆர்வம்

மே 13, 2020 21:33
 Comments  
 


Serena Williams, Tennis, USA
 

லாஸ் ஏஞ்சல்ஸ்: ‘‘மீண்டும் டென்னிஸ் போட்டியில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்,’’ என, செரினா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து, பாட்மின்டன், ஹாக்கி உட்பட ஒட்டுமொத்த விளையாட்டும் பாதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கால் விளையாட்டு நட்சத்திரங்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களான பிரெஞ்ச் ஓபன் ஒத்திவைக்கப்பட்டது, விம்பிள்டன் ரத்தானது.

இதுகுறித்து அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கூறியது: கொரோனா காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாதது ஏமாற்றம். விரைவில் டென்னிஸ் போட்டியில் விளையாட விரும்புகிறேன். இதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

இந்த ஓய்வை நான் விரும்பாவிட்டாலும், எனது உடலுக்கு தேவைப்பட்டது. தற்போது உடல் மற்றும் மனரீதியாக புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். போட்டியில் பங்கேற்பதற்கு தேவையான முழு உடற்தகுதி பெற்றுள்ளேன். வீட்டில் உடற்பயிற்சி செய்பவர்கள் காயம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முழங்காலில் பிரச்னை உள்ளவர்கள் ‘பேடு’ பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு செரினா கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?