Advertisement


இதயங்களை வென்றார் சானியா

மே 11, 2020 22:20
 Comments  
 


Sania wins Fed Cup Heart Award, donates prize money to CM Relief Fund
 

புதுடில்லி: பெடரேஷன் கோப்பை அமைப்பின், மக்கள் இதயங்களை கவர்ந்தவர் என்ற விருது வென்ற முதல் இந்தியர் ஆனார் சானியா மிர்சா.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 33. திருமணம், மகன் பிறப்பு காரணமாக சுமார் 2 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் களமிறங்கவில்லை. மீண்டும் வந்த இவர் ஹோபர்ட் தொடரில் கோப்பை வென்றார்.

தொடர்ந்து பெண்கள் டென்னிசின் உலக கோப்பை என்றழைக்கப்படும் ‘பெடரேஷன் கோப்பை’ தொடரில் நான்கு ஆண்டுகளுக்குப் பின் களமிறங்கினார் சானியா. 18 மாத மகன் இஜானுடன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டார். இந்திய அணி ‘பிளே ஆப்’ தொடருக்கு முன்னேற கைகொடுத்தார்.

இதையடுத்து ஆசிய/ஓசியானா பிரிவில் இருந்து, மக்கள் இதயங்களை கவர்ந்தவர் என்ற ‘ஹார்ட்’ விருதுக்கு சானியா பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இந்தோனேஷியாவின் பிரிஸ்கா பெயரும் இதில் இருந்தது.

வெற்றியாளரை முடிவு செய்ய இணையதளத்தில் ரசிகர்கள் ஓட்டளித்தனர். மொத்தம் பதிவான 16,985 ல், சானியா 10,000க்கும் அதிகமாக ஓட்டுகள் பெற்று சானியா வெற்றி பெற்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,‘‘பெடரேஷன் அமைப்பின் ‘ஹார்ட்’ விருது வென்ற முதல் இந்தியர் ஆனது பெருமையாக உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன். எனக்காக ஓட்டு அளித்த அனைத்து ரசிர்களுக்கும் நன்றி. எதிர்காலத்தில் இன்னும் தேசத்துக்கு பெருமை சேர்க்க முடியும் என நம்புகிறேன்,’’ என்றார்.

 

நிவாரண உதவி

சானியா கூறுகையில்,‘‘கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உலகம் சிக்கலான நிலையில் உள்ளது. விருதின் மூலம் கிடைத்த பணத்தை (ரூ. 1.50 லட்சம்), தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு தருகிறேன்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?